திருமண வீட்டில் பார்த்த சீதாவை ஹீரோயின் ஆக்கிய பாண்டியராஜன்.. இப்படி நடிக்காதே என பாலசந்தர் அறிவுரை..!

பிரபல நடிகையான நடிகை சீதா, பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கமல், ரஜினி படங்கள் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். அவருடைய திரை வாழ்க்கை பயணத்தை தற்போது பார்ப்போம்.

நடிகை சீதா சென்னையைச் சேர்ந்தவர்தான். அவர் 17 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருமணத்திற்கு பாவாடை தாவணியில் சென்றார். அந்த திருமண வீடியோவை பார்த்த பாண்டியராஜன், தன்னுடைய ஆண்பாவம் படத்தின் ஒரு நாயகிக்கு இவர் சரியாக இருப்பார் என்று தேர்வு செய்து அவருடைய வீட்டில் போய் நடிக்க அனுமதி கேட்டார்.

சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

சீதாவின் பெற்றோர் ஒப்புக்கொண்டாலும் சீதா தான் படிக்க வேண்டும் என்றும், இந்த வயதில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்றும் கூறினார். அதனை அடுத்து பாண்டியராஜன் அவரை சமாதானம் செய்து இந்த ஒரு படத்தில் மட்டும் நடியுங்கள், அதற்கு மேல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் தொடர்ந்து நடியுங்கள் அல்லது நீங்கள் தொடர்ந்து படியுங்கள் என்று சமாதானம் செய்து அந்த படத்தில் நடிக்க அனுமதி பெற்றார்.

seetha1

பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி மற்றும் சீதா நடிப்பில் உருவான அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இருநூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் பாண்டியராஜன் சீதாவை அடித்ததாக கூறப்படுகிறது. சீதாவின் குடத்திற்குள் வாட்ச் விழுந்துவிடும். அதை துணி வைத்து வடிகட்டுவார்கள். அப்போது குடத்தில் இருந்து தண்ணியை ஊற்ற வேண்டிய காட்சியில் சீதா குடத்தை கீழே போட்டு விட்டார். அப்போது ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குடம் கூட உன்னால் பிடிக்க முடியவில்லை என பாண்டியராஜன் கடிந்து கொண்டதாகவும் கிட்டத்தட்ட எட்டு டேக் வந்தபோது அவரை கையில் லேசாக அடித்ததாகவும் சீதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து சீதா கோபித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடம் இனிமேல் படப்பிடிப்புக்கு நான் போக மாட்டேன் என்று கூறியதாகவும், ஆனால் அதனை அடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் படக்குழுவினர் சமாதானப்படுத்திய பிறகு நடித்தார் என்றும் கூறப்படுகிறது.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளில் பாண்டியராஜனிடம் சென்று சீதா, ‘இந்த படத்தில் நான் நன்றாக நடித்தேனா? தொடர்ந்து நடிக்கலாமா? என்று கேட்டார். தாராளமாக நடிக்கலாம், நன்றாக நடிக்கிறாய், உன்னுடைய முகத்தில் உணர்ச்சிகள் மிக அழகாக உள்ளன, நீ கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நாயகியாக வருவாய்’ என்று அறிவுரை கூறினார்.

seetha

அதனை அடுத்துதான் அவர் பள்ளி படிப்பை விட்டுவிட்டு, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். ஆண்பாவம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி காரணமாக அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. குறிப்பாக அர்ஜுன் நடித்த ‘சங்கர் குரு’, ராம்கி நடித்த ‘தங்கச்சி’ முரளி நடித்த ‘துளசி’ ஆகிய படங்களில் நடித்தார்.

அப்போதுதான் ரஜினி, பிரபு இணைந்து நடித்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு கௌதமியும், பிரபுவுக்கு சீதாவும் ஜோடிகளாக நடித்தனர். குரு சிஷ்யன் படத்தில் சீதா கிளாமராக நடித்த நிலையில் பாலச்சந்தர் அவரை கூப்பிட்டு திட்டியதாகவும், உனக்கு கிளாமர் கேரக்டர் சரியாக வராது, நீ குடும்ப பங்கான கேரக்டர்களில் மட்டும் நடி, கிளாமர் பக்கம் போகாதே என்று அறிவுரை கூறியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘பெண்மணி அவள் கண்மணி’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பை பாராட்டிய கே.பாலச்சந்தர் தனது அடுத்த படமான ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அந்த படம் சீதாவுக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

seetha2

இந்த நிலையில் சீதா கடந்த 1989ஆம் ஆண்டு ‘புதிய பாதை’ என்ற படத்தில் நடித்தார். பார்த்திபன் நடித்து, இயக்கிய முதல் படமான இந்த படம் சீதாவுக்கு திரையுலக வாழ்க்கையில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் திருப்புமுனையை கொடுத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பார்த்திபன் – சீதா இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பார்த்திபனுக்கு அப்போது முதல் படம் என்றும், அவசரப்பட்டு சீதா அவரை திருமணம் செய்து தனது சினிமா மார்க்கெட்டை கெடுத்து கொண்டார் என்றும் பலர் அப்போது பேசினர். ஆனாலும் அவர் அதை கண்டு கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார்.

seetha

திருமணத்திற்கு பின்னரும் அவர் பல படங்களில் நடித்தார். இந்த நிலையில்தான் திருமண வாழ்க்கையில் திடீரென பிரச்சனை ஏற்பட்டு 2001ஆம் ஆண்டு பார்த்திபனை விவாகரத்து செய்தார். அதன் பிறகு அவர் தொலைக்காட்சி நடிகர் சதீஷ் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து அவரையும் 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்பி முத்துராமன்.. சமரசம் செய்த பாலசந்தர்.. ‘ஸ்ரீராகவேந்திரர்’ உருவான கதை..!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்த சீதா, தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான வேலன், பெண், இதயம் ஆகிய தொடர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகை சீதா கடந்தாண்டு கூட அதர்வாவுக்கு அம்மாவாக ‘டிரிகர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இனியும் அம்மா வேடம் கிடைத்தால் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...