கட்டம் கட்டிய ’கல்கி’!.. தெறித்து ஓடிய கமல்ஹாசன்?.. இந்தியன் 2 ரிலீஸ் ஒரேயடியாய் தள்ளிப் போகிறதா?..

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், லைகா நிறுவனம் தேதி எதையும் அறிவிக்கவில்லை.

இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப் போகிறது?:

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அந்த படக்குழுவினர் அறிவித்திருந்தனர். நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த கவனமும் அந்தப் படத்தின் மீது தான் உள்ளது என்கின்றனர்.

ஷங்கர் இதுவரை படத்தின் புரமோஷனை ஆரம்பிக்காத நிலையில் நிச்சயம் அந்த படம் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் 2, ரஜினிகாந்தின் லால் சலாம் என தொடர்ந்து படங்கள் லாபத்தை கொடுக்காமல் நஷ்டத்தை கொடுத்தவரும் நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படமும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு தற்போது பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கல்கி பார்த்த வேலையா?:

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் திட்டமிட்டபடி சரியாக வெளியாகி வசூல் செய்தால் மட்டுமே லைகா நிறுவனம் மீண்டும் பழையபடி மாஸ் காட்ட முடியும் என்றும் இல்லையென்றால் மொத்தமும் பியூஸ் போய்விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் வேட்டையன் என இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் அதிகம் நம்பியுள்ளது.

இந்த இரண்டு படங்களில் ஒரு படம் சொதப்பினாலும் பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ரிலீஸ் தேதியை பார்த்து பார்த்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறுகின்றனர்.

அதன் காரணமாக ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்றும் கூறுகின்றனர். இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகுமா அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும், மேலும் இந்தியன் 3 திரைப்படமும் அடுத்தாண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்மா, எஸ் ஜே சூர்யா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்தியன் 2 படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...