பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தின் டைட்டில் தீப்பொறி திருமுகமா?.. சோஷியல் மீடியாவே ஃபயர் விடுதே!..

ஜெயம் ரவிக்கு கோமாளி எனும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஷாரா, வருண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பற்றி வெற்றி பெற்றது.

GMvQbaxbAAAOaJy

பிரதீப் ரங்கநாதன் அடுத்த பட டைட்டில்:

கோமாளி படத்தை தொடர்ந்து எந்த ஹீரோவை வைத்து பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்விஸ்டாக தானே ஹீரோவாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கி இருந்தார்.

அப்பா லாக் எனும் குறும்படத்தை இயக்கியிருந்த பிரதீப் ரங்கநாதன் ரங்கநாதன் அதை படமாக டெவலப் பண்ணி ஏஜிஎஸ் தயாரிப்பில் லவ் டுடே எனும் டைட்டிலில் இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினார்.

அந்த படத்திற்கு பிறகு இனிமேல் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் பயணிப்பாரா என்கிற சந்தேகமே வரும் அளவுக்கு தொடர்ந்து பல இயக்குனர்கள் அவர் ஹீரோவாக வைத்து படம் இயக்க போட்டி போட்டு வருகின்றனர்.

தீப்பொறி திருமுகமா?:

அஜித்தை வைத்து படம் இயக்க காத்திருந்த விக்னேஷ் சிவன் விரட்டி அடிக்கப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐசி படத்தை இயக்கி முடித்துள்ளார் விக்னேஷ் சிவன். அந்தப் படத்தை திறந்து தற்போது மீண்டும் ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்த உள்ள படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவரும் 10 ஆண்டுகள் நண்பர்களாக உள்ள நிலையில், இருவரும் இணைந்து முறையாக பணியாற்ற உள்ளனர். அந்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என்றும் டைட்டிலுக்கு க்ளூவாக ஃபயர் என பிரதீப் ரங்கநாதன் தற்போது அப்டேட் கொடுத்திருந்தார்.

அதைப் பார்த்து ரசிகர்கள் நெருப்பு குமார், தீப்பொறி திருமுகம், பீனிக்ஸ், ஃபயரு, சூர்யா என ஏகப்பட்ட பெயர்களை பதிவிட்டு வருகின்றனர். தீப்பொறி திருமுகம் எப்படி இருக்கு என பிரதீப் ரங்கநாதனே அஸ்வத் மாரிமுத்துவை பார்த்து கேட்டுள்ள கமெண்டும் வைரலாகி வருகிறது.

அதிகாரப்பூர்வ டைட்டில் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி, வாணி போஜன், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு ஃபயரான படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து கொடுக்க காத்திருக்கிறார். விரைவில் எல்ஐசி படத்தின் ரிலீஸ் தேதியை விடுங்க ப்ரோ என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...