கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு இப்படி ஒரு பதிலை அளித்த அர்ஜுன் தாஸ்…

அர்ஜுன் தாஸ் ‘கைதி’ திரைப்படத்தில் வில்லனாக ‘அன்பு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தனது கவர்ச்சிகரமான குரலுக்காக அதிக ரசிகர்களைப் பெற்றவர். அதைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘அநீதி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அர்ஜுன் தாஸ் அவர்களின் ‘லைப் டைம் செட்டில்மென்ட் டா’ என்ற வசனம் மிக பிரபலமானது. அதை வைத்து நிறைய மீம்ஸ்களும் வந்தன. நடிகர் ரகுவரன் அவர்களுக்குப் பிறகு அதிகமாக பேசப்படுவதும் போற்றப்படுவதும் அர்ஜுன் தாஸ் குரல் தான் என்றால் மிகையாகாது.

‘அநீதி’ திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சைக்கோ திரில்லர் படமாக அநீதியில் அர்ஜுன் தாஸ் அவர்கள் மனா நோயாளியாக நடித்திருந்தார். ஆக்க்ஷன் காட்சிகளும் அபாரமாக நடித்திருந்தார். ஆண்களை விட பெண் ரசிகர்கள் தான் இவருக்கு அதிகம்.

தற்போது பிரபல யூ- டியூப் சேனல் அர்ஜுன் தாஸ் அவர்களுக்கு ‘மோஸ்ட் பிராமிஸிங் ஆக்டர்’ என்ற விருதை வழங்கியுள்ளது. அதன் பின்னர் அவரது திருமணம் எப்போது, எந்த மாதிரி பெண்ணை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிர்ச்சிகரமான பதிலை கூறியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், எப்படிப்பட்ட பெண்ணையும் எதிர்பார்க்கவில்லை, இப்போதைக்கு நோ மேரேஜ் என்ற மனநிலை தான் உள்ளது என்று பதிலளித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...