ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்பி முத்துராமன்.. சமரசம் செய்த பாலசந்தர்.. ‘ஸ்ரீராகவேந்திரர்’ உருவான கதை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர்கள் வரிசையில் நிற்கும் நிலையில் அவரது படத்தை இயக்க எஸ்.பி.முத்துராமன் மறுத்தார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் ரஜினியை வைத்து வித்தியாசமான படங்களையும் பல சூப்பர் ஹிட் படங்களையும் எடுத்தவர் எஸ்.பி.முத்துராமன். அவர் இயக்க மறுத்த அந்த படம்தான் ரஜினிகாந்த் நடிப்பில் பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான ‘ஸ்ரீ ராகவேந்திரர்’.

ரஜினிகாந்த் தனது நூறாவது படமாக ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ படம்தான் அமைய வேண்டும் என்று முடிவு செய்தார். அதுவரை ஸ்டைல்கள், அதிரடி சண்டைகள், ரொமான்ஸ் ஆகியவற்றை ஒவ்வொரு படத்திலும் காட்டிக் கொண்டிருந்த ரஜினிகாந்த் இந்த படத்தில் முழுமையாக ஒரு ஆன்மீகவாதியாக நடித்திருந்தார். தனது மானசீக குருவான ராகவேந்திரர் கதை மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக இந்த படத்தை அவர் உருவாக்க முடிவு செய்தார்.

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

‘ஸ்ரீ ராகவேந்திரர்’ படம் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பல ராகவேந்திரர் பக்தர்கள் உருவாகினர். மேலும் ராகவேந்திரர் என்ற ஒரு மகான் இருந்தார் என்பது பலருக்கும் தெரியவந்தது. இதேபோல் தான் ‘பாபா’ படத்தை எடுத்து பாபா என்பவர் யார் என்பதை உலகிற்கு தெரியப்படுத்தியவர் ரஜினிகாந்த்.

sri ragavendra movie2

‘ஸ்ரீ ராகவேந்திரர்’ படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்க முடிவு செய்த நிலையில், இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் தான் இயக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பினார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது எஸ்.பி.முத்துராமன் முதலில் தயங்கினார். இதுவரை நான் புராண படங்களை இயக்கியது இல்லை என்றும் அது மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நான் எப்படி ஒரு புராண படத்தை இயக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து அவரை கே.பாலசந்தரிடம் அழைத்துச் சென்று இந்த படத்தை இயக்குமாறு பரிந்துரை செய்ய கூறினார். எஸ்.பி.முத்துராமனின் தயக்கத்தை முதலில் இயக்குனர் பாலச்சந்தர் புரிந்து கொண்டாலும் அதன் பிறகு ரஜினிக்காக இந்த படத்தை இயக்குங்கள், நீங்கள் எத்தனையோ ரஜினியின் மாறுபட்ட படத்தை இயக்கியிருக்கிறீர்கள், இதுவும் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்று அறிவுறுத்தினார்.

கே.பாலச்சந்தர் சொல்லை தட்ட முடியாத எஸ்.பி முத்துராமன் இந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து ஏ.பி.நாகராஜன் இயக்கிய ஒரு சில சாமி படங்களை எஸ்.பி.முத்துராமன் பார்த்து அதன் பின் தன்னால் இந்த படத்தை இயக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டார்.

sri ragavendra movie1

இந்த படம் ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ குழந்தை பருவத்தில் இருந்து தொடங்கும். பிரசாதமாக வாங்கி வந்த மாம்பழத்தை கிருஷ்ணன் வாங்கி சாப்பிட, வீடு திரும்பும் போது மாம்பழம் எங்கே என்று பெற்றோர் கேட்க, கிருஷ்ணன் சாப்பிட்டுவிட்டார் என்று ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ கூறுவார். பொய் சொல்கிறாயா என அவரை பெற்றோர் அடிக்கும் போது கிருஷ்ணரே நேரில் வந்து நான்தான் சாப்பிட்டேன் என்று கூறும்போது அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கிருஷ்ணன் காலடியிலேயே உயிரை விட்டு சொர்க்கம் அடைவார்கள்.

இவ்வாறு தொடங்கும் இந்த படம் ஸ்ரீ ராகவேந்திரரின் ஒருசில அற்புதங்களை காண்பிக்கும். சாதி வேற்றுமைகளை கடந்து செயல்பட்டதால் கிராமத்து மக்களின் எதிர்ப்பை சம்பாதிப்பது, அதன் பின் குருவின் ஆலோசனைப்படி திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வது என கதை நகரும்.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

ஒரு கட்டத்தில் ஸ்ரீ ராகவேந்திரரின் குரு நீ சன்னியாசம் வாங்கிக்கொள் என சொல்ல அவரது மனைவி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அதனையும் மீறியதால் சன்னியாசம் செய்யும் போது அவரது மனைவி தற்கொலை செய்து கொள்வார். அதன் பிறகு அவர் ஆவியாக வந்தபோது அவரை சொர்க்கத்திற்கு ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ அனுப்பி வைப்பார். இப்படி பல ஆச்சரியமான, அதிசயமான காட்சிகளுடன் ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ படம் உருவாக்கப்பட்டு இருக்கும்.

ஸ்ரீ ராகவேந்திரர் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை சொல்லி கொண்டிருக்கும் நிலையில், படத்தில் அவர் 78வது வயதில் அவர் ஜீவசமாதி அடைவதாக காண்பிக்கப்பட்டு இருக்கும். இந்த படத்தில் அம்பிகா, மேஜர் சுந்தர்ராஜன், சத்யராஜ் ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்திருந்தார்கள். மேலும் கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், மனோரமா, பண்டரி பாய், ஒய் ஜி மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்திருந்தனர்.

sri ragavendra movie

இந்த படம் தயாராகும்போது படக்குழுவினர் அனைவரும் விரதம் இருந்ததாகவும் ரஜினியும் அசைவம் சாப்பிடாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது. ரஜினியின் வேகமான நடை ஸ்டைல் ஆகியவை ஒரு காட்சியில்கூட வராமல் எஸ்.பி.முத்துராமன் பார்த்துக்கொண்டார். ரஜினியின் ஸ்டைல் மற்றும் வேகமான நடை ஆகியவற்றை தவிர்த்து முழுக்க முழுக்க ஒரு அமைதியான ரஜினியை எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தில் காட்டி இருப்பார்.

அதேபோல் இந்த படத்தை தயாரித்தது தனக்கு பெருமை என்று பாலச்சந்தரும், இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று ரஜினியும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியன்று கூறினர்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸான நிலையில் தமிழக அரசு இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்தது. மேலும் சினிமா எக்ஸ்பிரஸ் இந்த படத்தில் சிறப்பாக நடித்த ரஜினிக்கு விருது வழங்கி கெளரவித்தது.

சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

இந்த படத்தில் ரஜினி உயிரை கொடுத்து நடித்திருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, வசூல் அளவிலும் சக்சஸ் ஆகவில்லை. ஆனாலும் இன்று வரை பேசப்படும் ஒரு படமாக இருக்கிறது. மேலும் ரஜினியின் சிறந்த படங்கள் பட்டியலில் ஸ்ரீ ராகவேந்திரர் படமும் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...