கில்லி படத்துல யாரும் கவனிக்காத சிறப்பான விஷயம்.. 100 தடவ பாத்தவங்களுக்கும் தெரியாது போலயே..

Ghilli Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்த திரைப்படங்களில் சூப்பர் ஹிட் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அதே வேளையில் விஜய் நடித்த படங்களிலேயே உங்களின் ஃபேவரைட் படங்கள் எது என அனைவரிடமும் கேட்டால் அவர்கள் யோசிக்காமல் சொல்லும் திரைப்படம் நிச்சயம் ‘கில்லி’ ஆகத்தான் இருக்கும்.

தூள், தில் உள்ளிட்ட பல கமர்சியல் திரைப்படங்களை இயக்கி உள்ள பிரபல இயக்குனர் தான் தரணி. இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து அவரது இயக்க பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பற்றி கேட்டால் அவரும் கில்லியை தான் நிச்சயம் சொல்வார்.

விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம், ஆரம்பம் முதல் கடைசி நிமிடம் வரை அனல் பறக்கும் வகையில் தான் அமைந்திருக்கும். பாடல், சண்டை, காமெடி, காதல் என அனைத்துமே அசத்தலாக இந்த படத்தில் அமைந்திருக்க, விஜய்யுடைய திரைப் பயணத்தில் உச்சம் தொட்ட முதல் படம் என்ற பெருமையும் இதற்கு உள்ளது.

பிரகாஷ் ராஜின் வில்லத்தனம், விஜய் வீட்டிலும், நண்பர்களிடையேயும் நடக்கும் காமெடி, கபடி போட்டிகள் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நிமிடமும் நகர்ந்ததால், கில்லி படத்தை இதுவரை 50 தடவைக்கு மேல் பார்த்தவர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

இன்றளவிலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், தொலைக்காட்சியில் போட்டால் ஒரு காட்சி கூட தவறாமல் அதனை ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர். இதனிடையே, 20 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவும் செய்திருந்தது. இந்த ஆண்டு வெளியான சில தமிழ் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் கில்லி ரீ ரிலீஸ் மாறி இருக்க, பலரும் இதனால் மிரண்டும் போனார்கள்.

அப்படி இருக்கையில் தான், கில்லி படத்தை 100 தடவை பார்த்தவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். கில்லி திரைப்படத்தில் விஜய் – பிரகாஷ் ராஜ் என ஹீரோ வில்லன் காம்போ தான் முக்கியமான ஒரு சிறப்பம்சம். ஆனால், இவர்கள் இருவரும் இந்த படத்தில் நேரடியாக உரையாடும் காட்சி ஒன்றே ஒன்று தான்.

த்ரிஷாவை பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது அடியாட்களிடம் இருந்து விஜய் அழைத்து வரும் காட்சியில் தான் அவர்கள் இருவரும் மாறி மாறி உரையாடுவார்கள். இது தவிர ஒரு காட்சியில் கூட இருவரும் உரையாடி இருக்க மாட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் “கபடி கபடி” என பிரகாஷ் ராஜ் சொன்னாலும் விஜய் பதிலுக்கு எதுவும் பேசி இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...