தன்னுடைய சொந்தப் பணத்தில் மற்ற பிரபலங்களுக்காக புகழ் தேடிய ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா? இப்படி ஒரு மனசா?

தமிழ் சினிமாவில் நடிகர்களில் வள்ளல், பொன்மனச் செம்மல் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போற்றுகிறோம். இதனால் எம்.ஜி.ஆர் பெரும் வள்ளலாக மக்கள் தலைவனாக உருவெடுத்தார். ஆனால் பலருக்கு மறைமுகமாகவும், தங்களால் இயன்ற அளவும் மக்களுக்கான பல நலத்திட்டங்களையும் பல நடிகர்கள் செய்திருக்கின்றனர் செய்து வருகின்றனர். இவற்றில் குறிப்பிடத்தகுந்த நடிகர் யாரென்றால் அது ரசிகர்களால் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும் நடிகர்தான் ஜெய்சங்கர்,

திரையுலகின் வள்ளல் என்றும், சிறந்த மனிதர் என்றும் புகழப்படும் ஜெய்சங்கர் 1965-ல் இரவும் பகலும் என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, முத்துராமன் ஆகியோருக்கு இணையாக நடித்துப் புகழ்பெற்றார். மேலும் சினிமாவில் வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் இவர் படங்கள் வராத தியேட்டர்களே இருக்காது என்னும் அளவிற்கு பிஸியாக நடித்தார். மேலும் படப்பிடிப்புத் தளங்களில் அனைவருடனும் மிக யதார்த்தமாகப் பழகுவார். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார். சில நேரங்களில் சம்பளம் வாங்காமலேயே பல படங்களில் நடித்துக் கொடுத்துள்ளார்.

ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!

இப்படி திரையுலகில் மிகுந்த நன்மதிப்பினைப் பெற்ற ஜெய்சங்கர் தன் வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் ஓர் ஆதரவற்றோர் காப்பகத்திற்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தாராம். இதில் என்ன சிறப்பம்சம் என்றால் ஒவ்வொரு முறையும் தான் சொந்த செலவில் உணவு வழங்கும்செலவினை ஏற்று அதை வேறு ஒரு பிரபலத்தையோ அல்லது நடிகரையோ வைத்துத்தான் கொடுப்பாராம்.

ஒருமுறை இவரது நண்பர் நீங்கள் ஏன் ஒவ்வொரு முறையும் உங்கள் பணத்தில் செலவழித்துவிட்டு மற்றொருவரை அழைத்து விருந்து பரிமாறுகிறீர்களே அப்போது அவருக்குத்தான் இந்தப் புண்ணியம் சேரும் அல்லவா என்று கேட்க, அதற்கு ஜெய்சங்கர் நான் அழைத்து வரும் பிரபலங்கள் இதுபோன்று செய்ததில்லை அல்லது அதனைப் பற்றிய விபரங்களும் அறியாமல் இருக்கலாம். அதனால் தான் இவர்களுக்கு தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும். மேலும் அவர்களும் இதைப்போன்று செய்ய ஆரம்பிப்பார்கள் என்று கூறியிருக்கிறார். தான் சேர்த்த புண்ணியத்தில் அடுத்தவரையும் பங்குபெற வைத்து அவர்களையும் சேவை செய்யும் மனநிலையை ஏற்படுத்திய ஜெய்சங்கரின் மனதை அறிந்து நெகிழ்ந்து போனாராம் நண்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews