தேர்வு நெருங்குகிறது-3

By Staff

Published:

படித்தாகி விட்டது,

எழுதியும் பார்த்தாகி விட்டது.

அடுத்து,

உங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கப்போகும் மதிப்பெண்களில் 60சதவீதம் வரை உங்கள் கையெழுத்துதான் முடிவு செய்யும். என்னதான் நீங்கள் பதில்களை சரியாக எழுதினாலும் கையெழுத்து புரியும் படி இருந்தால் தான் திருத்துகின்ற ஆசிரியரால் சரியாக திருத்த முடியும்.

உங்கள் கையெழுத்து தெளிவாக இல்லாவிட்டால் மதிபெண்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே கையெழுத்தில் கவனம் தேவை.

படிக்கும் போதே வினாக்களை பகுதி வாரியாக பிரித்துக் கொள்ளுங்கள், பெரிய அளவில் விடையளிக்க வேண்டிய வினாக்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள்..

ஏனென்றால் அதிகப்படியான பெரிய வினாக்களிலேயே 2 மார்க் மற்றும் 1 மார்க் கேள்வி பதில்கள் அடங்கி இருக்கும். இப்போது இதன் மூலமாகவே உங்களால் அதிக வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

தேர்ந்தடுத்து படித்தல்.

பழைய வினாத்தாள்களை சேகரித்துக் கொள்ளுங்கள். அதில் அடிக்கடி கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தையும் தவறாமல் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

ஏதேனும் ஒரு வினாத்தாளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களால் விடையளிக்க முடிகிறதா என்று பாருங்கள். அப்படி முடியாவிட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையளிக்க பயிற்சி செய்யவும்.

அடுத்து,

குறைவாக எழுதி அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

குறைந்த பாடங்களை மட்டுமே படித்து முழு மதிப்பெண் பெறுவது எப்படி?

தொடரும்…

Leave a Comment