கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களிடையே எஞ்சினியரிங் படிப்பிற்கான மோகம் குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் இடங்கள் காலியாக உள்ளது.
இந்த நிலையில் கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதால் புதியதாக இந்த கல்லூரிகளை திறக்க அதிகளவில் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் புதிதாக 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் அதே சமயம் த்து பொறியியல் கல்லூரிகள் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளாக மாற்றிக்கொள்ள விண்ணப்பம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.