தமிழ்மினிட்ஸ்.காம் (Tamilminutes.com) தனியுரிமை கொள்கை

தமிழ் மினிட்ஸின் வலைத்தளமான Tamilminutes.com-ஐ பார்வையிடுவதற்காக எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுடைய தனியுரிமையை நாங்கள் மிகவும் மதிக்கின்றோம், எங்களுடைய தனியுரிமை கொள்கையானது நேரடியானது மற்றும் எந்தவித மறைமுக ஒப்பந்தத்தையும் நாங்கள் இணைக்கவில்லை. உங்களுடைய தகவல்களை தானாகவே வழங்க முன்வந்தாலன்றி, நாங்கள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க மாட்டோம். நாங்கள் சேகரிக்கின்ற தகவலை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை விரிவாக கீழே கொடுத்துள்ளோம்.

தகவல் சேகரிக்கப்பட்டு தானாக சேமிக்கப்படும்

எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட, பக்கங்களைப் படிக்க நீங்கள் வருகையில், உங்கள் வருகை குறித்த குறிப்பிட்ட தகவலை சேகரித்து சேமித்து வைக்கிறோம். இந்த தகவலால் உங்களை தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாது.

நீங்கள் பயன்படுத்தும் உலாவி வகை (எ.கா. நெட்ஸ்கேப், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்), நீங்கள் பயன்படுத்தும் இயங்கு வகை (எ.கா. விண்டோஸ் அல்லது மேக் ஓ.எஸ்) மற்றும் உங்கள் இணைய சேவை வழங்குநரின் டொமைன் பெயர், உங்கள் வருகை மற்றும் நீங்கள் பார்வையிடும் தேதி மற்றும் நேரம் மட்டுமே எங்கள் தளத்தில் பதிவாகும். எங்கள் வலைத்தள  வடிவமைப்பு, உள்ளடக்கம் மற்றும் முக்கியமாக உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்காக சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம்.

சுயவிருப்பத்தின் பேரில் தனிப்பட்ட விபரங்கள் சேகரிப்பு

நீங்கள் சுயமாக வழங்கப்படும் தகவல்களை மட்டுமே நாங்கள் சேகரிக்கிறோம். நாங்கள் உங்களுடைய அடையாளம் காணக்கூடிய தகவல் வகையான முகவரி, மின்னஞ்சல் முகவரி, உங்கள் விருப்பமான பகுதிகள் பற்றிய தகவல் மற்றும் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை மட்டுமே சேகரித்து வைக்கிறோம். உதாரணமாக, எங்கள் செய்திகள் பற்றிய உங்கள் கருத்தை அனுப்ப உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்க வேண்டும். எங்கள் ‘தவலை பகிர்தல்’ வசதியைப் பயன்படுத்தும்போது மற்றொரு நபரின் மின்னஞ்சல் முகவரியையும், உங்கள் பெயரையும் உள்ளிடலாம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் பகிர்வு செய்யலாம். நீங்கள் வழங்கிய தகவல் எந்த தனியார் நிறுவனங்கள் அல்லது தனியார் நபர்களுக்கும் வழங்கப்படவில்லை அல்லது விற்கப்படவில்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்துகிறோம்.

மூன்றாம் தரப்பு தளங்கள் மற்றும் ஆதரவாளர்கள் (Sponsors) மூலம் தகவல் சேகரிப்பு

எங்களது வலைத்தளத்தில், பதிவுகளை பகிரும் பக்கத்தில் எங்களுடைய தனியுரிமைக் கொள்கைகளுக்கு வேறுபட்டிருக்கும் பிற வலைதளங்களின் இணைப்புகளைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்றாம் தரப்பினரால் சேகரிக்கப்படும் தகவல்களின் மீது கட்டுப்பாடு இல்லாததால் பார்வையாளர்கள் மூன்றாம் தரப்பு தளங்களின் தனியுரிமை அறிவிப்புகளைப் அவர்களின் வலைத்தளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் பக்கங்களில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைச் சேர்ப்பதற்கு ஒரு மதிப்புக்குரிய மூன்றாம் தரப்பு சேவையை நாங்கள் பயன்படுத்துகிறோம். விளம்பரங்களை வழங்குவதில், மூன்றாம் தரப்பு விளம்பரதாரர் ‘குக்கீ’ – ஐ பயன்படுத்தி உங்கள் உலாவியியலிருந்து தகவலை அடையாளம் கண்டு உங்களுக்கு ஆர்வமுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் விளம்பரங்களை எங்கள் பக்கங்களில் வழங்கலாம் மற்றும் இந்த பிற வலைதளங்கள் உங்கள் வருகைகள் பற்றிய தகவலை (உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி உட்பட) பயன்படுத்தக்கூடும்.

தகவல்கள் பற்றிய ஒப்புதல்

எங்கள் வலைதளத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பெரும்பான்மை பிற வலைத்தளங்களிலிருந்தும், கூகுள் தேடலிருந்தும் எடுக்கப்படுபவை. பிறரின் பதிப்புரிமை-ஐ மீறும் நோக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை. உங்களுடைய பதிப்புரிமை-ஐ நாங்கள் மீறினோம் என நம்பினால், எங்களை support@tamilminutes.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.