கிருஷ்ண ஜெயந்தியை பாஞ்சராத்ர ஜெயந்தி, கோகுலாஷ்டமின்னு பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதுல கிருஷ்ணஜெயந்தியும், பாஞ்சராத்ர ஜெயந்தியும் ஒண்ணு. கோகுலாஷ்டமிங்கறது வேற. இது கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி என்னைக்கு வருதோ அதைக் கணக்கு வச்சு கொண்டாடுற நாள். அது போல ரோகிணி நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து நாம கொண்டாடுற நாள் பாஞ்சராத்ர ஜெயந்தி. ஆனால் இந்த ஆண்டு இது எல்லாமே நமக்கு ஒன்றாகவே அமைந்துள்ளது.
அந்த வகையில் இன்று தான் நமக்கு கிருஷ்ணஜெயந்தி. இன்று (4.9.2026) அதிகாலை 2.09 மணிக்கு அஷ்டமி ஆரம்பித்தது. இன்று இரவு 11.46 மணி வரை உள்ளது. அதுபோல இன்று அதிகாலை 12.57மணிக்கு ஆரம்பித்த ரோகிணி, இரவு 11.22 மணி வரை உள்ளது. கிருஷ்ணர் எளிமையான வழிபாட்டையே மிகவும் ஏற்பார்.
எத்தனையோ ராஜராஜாக்கள் எல்லாம் கிருஷ்ணரைப் பார்ப்பதற்கு வைரம், வைடூரிய ஆபரணங்களை எல்லாம் வைத்து, அவருக்கு கப்பமாகக் கட்ட கிருஷ்ணர் வீட்டு வாசலில் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருந்தாங்களாம். ஆனா அப்போ அவருடைய நெருங்கிய நண்பரும், பரம ஏழையுமான குசேலன் ஒரே ஒரு கைப்பிடி அவலை மட்டும் எடுத்துக்கொண்டு கிருஷ்ணரைப் பார்க்க வருகிறார்.
அந்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, கண்ணன் என்னைப் பார்ப்பானா? என்ற ஆவலுடன் நின்றார். ஆனால் குசேலர் வந்துள்ளார் என்பதைத் தெரிந்த உடன் கண்ணன் தங்க, வைர, வைடூரியங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு குசேலரின் அவலை வாங்கிவிட்டு அவருடைய கவலையையும் தீர்த்தார். நட்பின் இலக்கணத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தினார்.
அதன்படி கிருஷ்ணன் எதிர்பார்ப்பது உண்மையான அன்புதான். அதன்படி எளிமையான வழிபாடாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார். பொதுவாக பாலினால் உண்டாகக்கூடிய பொருள்களை நைவேத்தியமாக வைப்பது சிறப்பு. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.





