விவேக் கேட்ட 3 கமல்கள்…. கலைஞானி சொன்ன நச் பதில்!

தமிழ்த்திரை உலகில் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக். கமலை கலைஞானி என்பார்கள். கமலிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு சுவற்றில் பட்ட பந்து போல பட் பட்டென்று அவரிடம் இருந்து பதில்கள் வரும்.…

தமிழ்த்திரை உலகில் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக். கமலை கலைஞானி என்பார்கள். கமலிடம் எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு சுவற்றில் பட்ட பந்து போல பட் பட்டென்று அவரிடம் இருந்து பதில்கள் வரும். அது சினிமா மட்டுமல்ல. எந்தத் துறையைப் பற்றிக் கேட்டாலும் அசால்டாகப் பதில் சொல்வார். அதுவும் அட்ராசிட்டியாகவே இருக்கும். அந்தக் காலத்தில் பண்டிகை காலங்களில் டிவிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக கமலின் கேள்வி பதிலும் கண்டிப்பாக ஏதாவது ஒரு சேனலில் இடம்பெறும்.

அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் கமலை நோக்கி பல கேள்விக்கணைகளை விவேக் தொடுக்கிறார். அதற்கு கமல் சொன்ன பதில்கள் ‘நச் நச்’ என்று இருந்தன. அதில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.

களத்தூர் கண்ணம்மா கமல், காதல் மன்னன் கமல், களமிறங்கி கருத்து சொல்லும் கமல் இந்த 3 பேரைப் பற்றியும் ஏதாவது ஒரு ஒரு வார்த்தை சொல்லுங்கன்னு விவேக் ஒரு நிகழ்ச்சியில் கமலிடம் கேட்கிறார். அதற்கு கமல் சொன்ன பதில் இதுதான்.

களத்தூர் கண்ணம்மா கமல் அது சொன்னதைச் சொல்லும் கிளி. குழந்தை. கிள்ளை. அதற்குப் பிறகு காதல் மன்னன் கமல் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதில் மன்னர்கள் யாருமில்லை. அதுவாகவும் கொஞ்சநாள் வாழ்ந்து பார்த்து விட்டேன்.

அவ்வளவு தான். மற்றபடி களமிறங்கும் கமல். அது என் குரல். உங்கள் குரல். என்னைப் பேச வைத்துக் கொண்டு இருக்கும் உணர்வு, குரல் எல்லாம் மக்களின் குரல் தான். நன்றி என்றார் கமல்.