மாத்தி யோசி: நாய்களுக்காக ஒரு பியூட்டி பார்லர்.. லட்சத்தில் வருமானம் பார்க்கும் இளைஞர்..

By Bala Siva

Published:

 

போட்டிகள் அதிகம் உள்ள இந்த காலத்தில், வித்தியாசமாக சிந்தித்து வேலை செய்தாலோ அல்லது தொழில் செய்தாலோ தான் வெற்றி அடைய முடியும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இளைஞர் ஒருவர் வித்தியாசமாக சிந்தித்ததால் நாய்களுக்கு அழகு சாதன நிறுவனம் ஒன்றை தொடங்கி தற்போது லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

வீட்டில் செல்லமாக நாய் வளர்ப்பவர்களுக்கு பெரும்பாலும் அவற்றை குளிப்பாட்ட, முடி வெட்ட, அல்லது நடைபயிற்சி அழைத்துச் செல்ல நேரம் இருக்காது. இந்த நிலையில், இதை சரியாக புரிந்துகொண்ட இளைஞர் ஒருவர் செல்லப் பிராணிகளுக்காக அழகு நிலையம் தொடங்கியுள்ளார். இதற்காக, பிரத்யேக சேவைகளை வடிவமைத்துள்ளார்.

நாய்களை நடை பயிற்சி அழைத்து செல்வது, குளிப்பாட்டி, முடி வெட்டி, மேக்கப் செய்யும் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இவரை தொடர்பு கொண்டால், அவர் உடனே வீடு தேடி சென்று, நாய்களுக்கு தேவையான சேவைகளை செய்து கொடுக்கிறார். மசாஜ், குளிப்பாட்டுதல், நகம் வெட்டுதல், முடி திருத்தம், பல் துலக்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

இந்த சேவைகளுக்கான கட்டணத்தை ஏற்றவாறு வசூலிக்கும் நிலையில், அவருக்கு தற்போது மாதம் லட்சக்கணக்கில் வருமானம் வருவதாக கூறப்படுகிறது.