அரவிந்த்சாமி புகழ் பெற்ற தென்னிந்திய நடிகர் ஆவார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் அரவிந்தசாமி. இவர் பிரபல தொலைக்காட்சி நடிகரான டெல்லி குமார் அவர்களின் மகன் ஆவார். தனது மாமாவிடம் வளர்ந்தவர் அரவிந்த்சாமி.
மணிரத்தினம் இயக்கிய தளபதி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அரவிந்த்சாமி. பின்னர் 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானார் அரவிந்தசாமி.
ரோஜா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று முதல் படத்தின் மூலமாகவே பெயரும் புகழும் அடைந்தார் அரவிந்த்சாமி. தொடர்ந்து மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, என் சுவாச காற்றே போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்த அரவிந்த்சாமி பின்னர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் 2000 களின் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
2012 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தில் நடித்தாதன் மூலம் கம்பேக் கொடுத்த அரவிந்த்சாமி அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் துணை கதாநாயகன் வேடத்தில் நடித்து பிரபலமாகிக் கொண்டிருப்பவர் அரவிந்த்சாமி. தற்போது இவர் நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அரவிந்த்சாமி லைப் ஸ்டைலை பற்றி பேசி இருக்கிறார். அப்போது நம்ம பத்து ரூபா சம்பாதிக்கிறோம் அடுத்தவன் நமக்கு மரியாதை கொடுக்கணும்னு ஐம்பது ரூபாய்க்கு கடன் வாங்கி கார் வாங்கிட்டு அப்புறம் மாச மாசம் கஷ்டப்பட்டு கடன் அடைக்கிறதுல என்ன பலன் இருக்கு அப்படி செய்யணும் என்ன அவசியம் இருக்கு. அடுத்தவங்களுக்காக நம்ம வாழவே கூடாது என்று பேசி இருக்கிறார் அரவிந்த்சாமி.