அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜயின் 69ஆவது படத்தின் அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டு இருக்கிறது. அவருடைய 69ஆவது படத்தை எச் வினோத் இயக்க கேபிஎன் புரொடக்ஷன் படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் முதன் முதலில் தமிழில் காலடி எடுத்து வைக்கிறது இந்த கேபிஎன் புரொடக்ஷன்.
தெலுங்கில் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த நிறுவனம்தான் இந்த கே பி என் ப்ரொடக்ஷன். அது மட்டுமல்ல பெரிய பெரிய பட்ஜெட் படங்களையும் மற்ற மொழிகளில் தயாரித்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்திருக்கிறது.
அடுத்ததாக விஜயை வைத்து தமிழில் முதன்முதலாக அவருடைய 69 ஆவது படத்தை தயாரிக்க இருக்கிறார்கள் கேபிஎன் புரொடக்ஷன். ஆரம்பத்தில் இருந்தே தளபதி 69 ஆவது படத்தை எச் வினோத் தான் இயக்குவார் என்று வாய் வழியாக சொல்லி வந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு.
எச் வினோத்தான் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று வரை யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக சில வதந்திகள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் இப்போது அனிருத் தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுது கையில் தீப சுடரை ஏந்தியவாறு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
கூடவே ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார் என்பதை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். எச் வினோத் ஏற்கனவே விஜயை வைத்து ஒரு நல்ல அரசியல் படத்தை தான் எடுப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்த வாசகத்திற்கு ஏற்றார் போல கண்டிப்பாக இந்த ஜனநாயகத்தின் அடுத்த ஒளி விஜய் தான் என்பதைப் போல இந்த படம் கண்டிப்பாக ஒரு நல்ல அரசியல் களம் சார்ந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.