சந்திரனின் தோஷம் நீங்க தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் தலத்தை பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இதே போல் சந்திரதோஷம் நீக்கும் சில கோவில்களை பற்றி பார்ப்போம். இன்று இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து குவியும் இடம் திருப்பதி. திருப்பதி வெங்கடேசபெருமாளை வணங்க பல லட்சம் பக்தர்கள் தினம் தோறும் வருகின்றனர். இவர்கள் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் கூட வரிசையில் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையானை அவ்வளவு சீக்கிரத்தில் தரிசித்து விட முடியாது. காத்திருந்து பொறுமையுடன் தான் தரிசிக்க இயலும்.
இது சந்திரனுக்குரிய ஸ்தலமாகும் அதனால் சந்திர தசை நடப்பவர்கள், சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து ஏழுமலையானை வேண்டி செல்லலாம்.
சந்திர தசை நடப்பவர்களும் ஜாதக ரீதியாக சந்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அடிக்கடி இங்கு சென்று வர மாற்றங்கள் உண்டாகும்.
சிரமம் பார்க்காமல் அடிக்கடி சென்று வர வேண்டும்..