கொரோனா- 14 வயது அதிசய சிறுவன் சொல்லும் கணிப்புகள்

கர்நாடகா மாநிலம் மைசூரில் வசித்து வரும் சிறுவன் அபிக்யா ஆனந்த். இந்த சிறுவன் ஒரு அதிசய சிறுவன். 14 வயதிற்குள் வான சாஸ்திர விசயங்களை கரைத்து குடித்து வைத்திருக்கும் இந்த சிறுவன் ஒரு அதிசய…

கர்நாடகா மாநிலம் மைசூரில் வசித்து வரும் சிறுவன் அபிக்யா ஆனந்த். இந்த சிறுவன் ஒரு அதிசய சிறுவன். 14 வயதிற்குள் வான சாஸ்திர விசயங்களை கரைத்து குடித்து வைத்திருக்கும் இந்த சிறுவன் ஒரு அதிசய தெய்வீக குழந்தையாகவே பார்க்கப்படுகிறான்.

78d603a3a4d913b10ced9f5f4bd7b19a

உலகம் முழுவதும் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டம் மிக மோசமாக இருக்கிறது என முன்பே கணித்து சொன்னவன் இந்த சிறுவன். தற்போது ஏற்பட்டுள்ள இந்தகொடூரமான கொரோனா சூழலில் இந்த சிறுவன் சொல்லும் வான சாஸ்திர கணக்கு என்ன என்று பார்ப்போம்.

இப்போது இந்த சிறுவனின் யூ டியூப் வீடியோக்கள்தான் டிரெண்டிங்கில் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22, 2019 அன்று, தனது யூடியூப் சேனலில்,அபிக்யா ஆனந்த், பேசியுள்ளான். அதில் நவம்பர் 2019 முதல் 2020 ஏப்ரல், வரை உலகம் ஒரு கடினமான சூழ்நிலையை சந்திக்கும், என்று சரியாக துல்லியமாக கணித்துள்ளான்.

இந்த 6 மாத காலப்பகுதியில் உலகம்,  ஒரு நோய் தொற்று பரவுதல் மூலம் கடுமையாக, அவதியுறும். இதனால் ஒரு பதற்றமான நிலைக்கு உலகம் ,தள்ளப்படும். இதன் தாக்கம் மார்ச்31-ம், தேதி அன்று{அதாவது இன்று} உச்சத்தில் இருக்கும். மே 29 அன்றுதான் இப்பூமி இந்த, கடினமான நோய் தொற்றில், இருந்து சுத்தமாக மீளும் அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்து கொண்டுதானிருக்கும்.

இது ஒரு உலகப்போர் போன்றதுதான் அதாவது வைரசுக்கும் மனிதனுக்கும் நடக்கும் போர் என்று துல்லியமாக கணித்து கூறியுள்ளான் இந்த சிறுவன். இது குறித்து யாரும் பீதியடைய தேவையில்லை எனவும் இந்த சிறுவன் கூறியுள்ளான்.

வரும் ஏப்ரல் 5 வரை இது இருமல்,தும்மல் போன்றவை அதிகம் இருக்கும் மார்ச் 31ல் இருந்து சில நாட்களுக்கு இது அதிகம் இருக்கும். இது குறித்தான மந்திரங்கள் எல்லாம் சொல்லி இருக்கிறார் அபிக்யா ஆனந்த்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன