தெய்வ வழிபாடு நமது எல்லா துன்பங்களையும் போக்கும். ஆனாலும் யாருக்கு எந்த கடவுளை வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்குமென நம் முன்னோர்கள் நியதி வகுத்திருக்கிறார்கள். அதன்படி 27 நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சிவரூபங்கள் எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!
1.அஸ்வினி – கோமாதாவுடன் கூடிய சிவன்
2. பரணி – சக்தியுடன் கூடிய சிவன்
3. கிருத்திகை – சிவன் தனியாக
4. ரோகிணி – பிறை சூடியப் பெருமான்
5. மிருகசீரிஷம் – முருகனுடைய சிவன்
6. திருவாதிரை – நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்
7. புனர்பூசம் – விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
8. பூசம் – நஞ்சுண்டும் சிவன்
9. ஆயில்யம் – விஷ்னுவுடன் உள்ள சிவன்
10. மகம் – விநாயகரை மடியில் வைத்த சிவன்
11. பூரம் – அர்த்தநாரீஸ்வரர்
12. உத்திரம் – நடராஜ பெருமான் – தில்லையம்பதி
13. அஸ்தம் – தியாண கோல சிவன்
14. சித்திரை – பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்
15. சுவாதி – சகஸ்ரலிங்கம்
16. விசாகம் – காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்
17. அனுஷம் – இராமர் வழிபட்ட சிவன்
18. கேட்டை – நந்தியுடன் உள்ள சிவன்
19. மூலம் – சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
20. பூராடம் – சிவ சக்தி கணபதி
21. உத்திராடம் – ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்
22. திருவோணம் – சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்
23. அவிட்டம் – மணக்கோலத்துடன் உள்ள சிவன்
24. சதயம் – ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன்
25. பூரட்டாதி – விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்
26. உத்திரட்டாதி – கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
27. ரேவதி – குடும்பத்துடன் உள்ள சிவன்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவரூபங்களை வழிபட்டு வந்தால் எப்போதும் துன்பம் இல்லை.