அனைத்து உலக நாடுகளையும் வியப்பில் ஆழ்த்திய நாளந்தா பல்கலைக்கழகம் பற்றிய வரலாற்று உண்மைகள்!

By Sowmiya

Published:

உலகிலேயே மிகப் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகம் தான் நாளந்தா பல்கலைக்கழகம். இந்தியாவின் பீகார் மாநிலத்தில் குப்த பேரரசின் காலத்தில் குமாரகுப்தரால் நிறுவப்பட்டது இந்த நாளந்தா பல்கலைக்கழகம். கிட்டத்தட்ட 14 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் இந்தியா மட்டும் இன்றி சீனா, திபெத், இந்தோனேசியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பத்தாயிரம் மாணவர்கள் பயின்றும் அவர்களுக்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கற்பித்தும் இருந்துள்ளனர். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கி பயில கூடிய வகையில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்துள்ளது.

images 4 22 1

இந்திய நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் கல்வியின் அடையாளமாக இந்த நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்துள்ளது. இதில் இருந்த நூலகம் பல ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் மிகப் பெரிய கட்டிடமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. பௌத்த கல்வி மட்டுமின்றி அறிவியல், மருத்துவம், வானவியல், தர்க்கம், கணிதம் போன்ற பல படிப்புகள் இங்கு கற்பிக்கப்பட்டு உள்ளது.

ஒரு நாட்டினை அழித்திட அந்த நாட்டின் அடையாளத்தை, கல்வியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் மூன்று முறை படையெடுப்பிற்கு உள்ளாகி சிதைக்கப்பட்டது.

images 4 27

கிபி 445 ஆம் ஆண்டு ஸ்கந்தகுப்தரின் ஆட்சி காலத்தில் ஹன்ஸ் படையினர் மிஹிரக்குல்லா தலைமையில் நாளந்தா பல்கலைக்கழகத்தை படை எடுத்து தாக்கினர். அதன் பின் ஸ்கந்த குப்தர் வாரிசுகளால் மறுசீரமைக்கப்பட்டு பல்கலைக்கழகம் இயங்கி வந்தது.

மீண்டும் ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனர் ஆட்சி காலத்தில் படையெடுத்து கடுமையாக சிதைக்கப்பட்டு மீண்டும் மறுசீர் அமைக்கப்பட்டது.

அதன் பின் 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் ராணுவப் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு இதில் உள்ள பல கல்வி பொக்கிஷங்கள் சூறையாடப்பட்டது.

images 4 26

நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகம் மட்டுமே தொடர்ந்து மூன்று மாதங்களாக எரிந்து அணைந்துள்ளது எனில் அதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை நினைத்துப் பாருங்கள்.

உலகம் முழுவதையும் சுற்றி வந்த யுவான் சுவாங், ஹூயூன் சங் போன்ற சீனப் பயணிகளும் இங்கு வந்து கல்வி பயின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூஜ்ஜியத்தை ஒரு எண்ணாக கண்டறிந்து அங்கீகரித்த கணித மேதை மற்றும் வானவியல் அறிஞர் ஆரியபட்டா ஏழாம் நூற்றாண்டில் இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்துள்ளார்.

images 4 20

இதில் மாணவர்கள் யாருக்கும் சேர்க்கை எளிதில் நடைபெறவில்லை. வாய்மொழி தேர்வு, எழுத்துத்தேர்வு என பல நுழைவுத் தேர்வுகளில் மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி பல பெருமைகளை பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் அழிந்தது இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும். அழிந்து போன புத்தகங்கள், ஓலைகள், மருத்துவ குறிப்புகள் இவை காலத்திற்கும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.

2006ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் முன்மொழிந்த படி 2014 ஆம் ஆண்டிலிருந்து புது பொலிவுடன் நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இயங்கி வருகிறது.