எப்போதும் கவலை கவலை கவலை… தொழிலில் நஷ்டம்…. வியாபாரம் சரியில்லை. வீட்டில் எப்போதும் மளிகை பொருள்கள் தட்டுப்பாடு… ஒரு தங்கம் வாங்க முடியலை… ஒரு பணம் காசு கையில நிக்க மாட்டேங்குது… வரவுக்கு மீறி செலவாகுது என்ன செய்ய என்று புலம்பித் தவிப்பவர்களை நாம் நாளும் பார்த்திருப்போம்.
அப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இதையும் தான் செய்து பாருங்களேன்… இனி உங்கள் வாழ்வில் புத்துணர்ச்சி மலர இந்த பரிகாரம் பேருதவியாக இருக்கும். என்ன என்று பார்க்கலாமா…
நிறைய தங்க நகைகள் வாங்கலாம். கல்லாப்பெட்டியில் தன லாபம் அதிகமாக இருக்கும். வீட்டில் சமையல் அறையில் தானியங்களுக்குப் பஞ்சம் வராமல் இருக்கும்.
சிலருக்கு திடீர்னு எப்படி அதிர்ஷ்டம் வந்ததுன்னு நினைப்பாங்க. அதை வெளியே சொல்ல மாட்டாங்க. அப்படிப்பட்ட ஒரு ரகசிய தாந்திரீக பரிகாரம்.
ஜாதிக்காய்க்கு இயற்கையான குணங்கள் அதிகமாக இருக்கு. அழகாக மாறணும்னா இதைப் பயன்படுத்துவாங்க. இதனுடன் எந்த ஒரு பொருளையும் சேர்த்து பயன்படுத்தினால் அது அதிகமாக வந்து சேரும். அந்தக்காலத்தில் கூட நமது முன்னோர்கள் கல்லாப்பெட்டியில் இந்தப் பொருளைப் போட்டு வைப்பாங்க.
ஒரு மஞ்சள் கலர் துணியை எடுத்துக்கோங்க. சதுர வடிவில் எடுத்து 3 ஜாதிக்காயை எடுத்து அதனுடன் 1 ரூபாய் நாணயம் வைத்து மஞ்சள் நூலால் கட்டி பீரோவில் வைத்து விடுங்க. கண்டிப்பாக உங்களுக்கு எதிர்பாராத பணவரவு வந்துகிட்டே இருக்கும்.
தங்கம் அதிகமாக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதே போல ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் 3 ஜாதிக்காய் மற்றும் ஒரு தங்க மோதிரம் அல்லது ஏதாவது ஒரு ஆபரணத்தை வைத்து முடிந்து கொள்ளுங்கள்.
இதை பீரோவில் வைக்கவும். குறிப்பாக தங்கம் வைக்கும் இடத்தில் இதை வைங்க. நீங்கள் அதிகமாக தங்க நகை வாங்குவீங்க. அதற்கு உண்டான பணம் வந்துக்கிட்டே இருக்கும். அதே போல 3 ஜாதிக்காயுடன் வெள்ளி காயின் அல்லது வெள்ளி மோதிரத்தை முடிந்து வைத்தால் அதிகமாக வீட்டில் வெள்ளிப் பொருள்கள் வாங்குவீங்க.
சமையல் அறையில் மளிகை சாமான் குறையவே கூடாது என்று நினைப்பவர்கள் ஜாதிக்காயுடன் கொஞ்சம் துவரம்பருப்பை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து வைங்க. இதன் மூலம் சமையல் அறையில் மளிகை சாமான்களுக்கு பஞ்சமே வராது.
தொழில் செய்யுற இடத்தில் லாபம் வரவில்லை நஷ்டமாக வருகிறது என்று எண்ணுபவர்கள் ஒரு மஞ்சள் துணியில் 3 ஜாதிக்காய் உடன் ஒரு வெள்ளை பேப்பரில் சுபம் லாபம் என்று எழுதி அதில் மஞ்சள் குங்குமம் வைத்து அதனுடன் 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து முடிந்து கொள்ளுங்கள்.
இப்போது நல்லா லாபம் வரணும்னு மனதில் வேண்டிக்கிட்டு கல்லாப்பெட்டியில் இதை வைங்க. இதை எந்த இடத்தில் வைக்கிறோமோ அந்த இடத்திற்குரிய பொருள் அதிகமாக வந்து சேரும்.
பணம் வைக்கிற இடத்தில் வைத்தால் பணம் அதிகமாக வந்து சேரும். தங்கம் வைக்கிற இடத்தில் வைத்தால் தங்கம் அதிகமாக வந்து சேரும். இந்த ஜாதிக்காயை வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்போது அந்த ஜாதிக்காயை கால் படாத இடத்தில் போட்டு விட்டு அதே துணியில் புதிய ஜாதிக்காயை வைத்து முன்பு போல கட்டி முடிந்து வைங்க.