டிஎன்பிஎஸ்சி குரூப் 4: பிரித்தெழுதுக- பகுதி 3

By Gayathri A

Published:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

பிரித்தெழுதுக:

வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்

மூவகை – மூன்று + வகை

நன்செய் – நன்மை + செய்

புன்செய் – புன்மை + செய்

நறுநெய் – நறுமை + நெய்

நூற்றாண்டு – நூறு  +  ஆண்டு

செந்தமிழ் – செம்மை   +  தமிழ்

தொல்காப்பியம் – தொன்மை +  காப்பியம்

பழந்தமிழர் – பழமை    +  தமிழர்

புறநானூறு – புறம்  +  நான்கு  + நூறு

எத்திசை – எ +  திசை

அச்செல்வம் – அ +  செல்வம்

செவியுணவின் – செவி +  உணர்வின்

இழைத்துணர்ந்து – இழைத்து +  உணர்ந்து

வாயுணர்வின் – வாய்      +  உணர்வின்

பன்மொழி – பல +  மொழி

பதிவேடு – பதிவு  +  ஏடு

பேராசிரியர் – பெருமை  +  ஆசிரியர்

அரும்பணி – அருமை  +  பணி

பழந்தமிழ் – பழமை +  தமிழ்

சிற்றினம் – சிறுமை +  இனம்

வாழ்வுரிமை – வாழ்வு + உரிமை

அறப்போர் – அறம் +  போர்

தவிர்ந்துன்னை – தவிர்ந்து +  உன்னை

புறச்சூழல் – புறம் +  சூழல்

முக்கனி – மூன்று + கனி

வெருவிலான் – வெருவு +  இலான்

நாண்மதி – நாள் +  மதி

 

Leave a Comment