லியோவில் விஜய் மகனாக மேத்யூ தாமஸ்.. இவரை தேர்ந்தெடுக்க என்ன காரணம்.. வெளியான தகவல்..!

விஜய், திரிஷா, அர்ஜுன் ஆகியோர் நடித்த படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2008 ஆம் ஆண்டு வெளியான குருவி படத்தில் விஜய், திரிஷா இணைந்து நடித்த பிறகு 14 வருடங்கள் கழித்து இந்த படத்தில் ஒன்றாக நடித்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே வெளியான ஒரு மாதத்திலேயே இந்த படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருப்பார்கள்.

நா வேற எங்க அப்பா வேற!! ஹீரோவாக களமிறக்கும் விஜய் சேதுபதியின் மகன்!!

தெறி படத்தில் சின்ன குழந்தைக்கு அப்பாவாக நடித்த விஜய் முதல் முறையாக தனது மகனின் வயதில் இருக்கும் இளைஞனான மேத்யூ தாமஸுக்கு அப்பாவாக இந்த படத்தில் நடித்துள்ளார். மேத்யூ தாமஸ் மலையாள நடிகர் ஆவார். இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து சமீப காலமாக பிரபலமாகி வருபவர்.

Screenshot 20231130 155930 Chrome

 

விஜய் அவர்களின் தோலுக்கு வளர்ந்த வயதில் ஒரு மகன் இருப்பது போல் கதை என்றால் வேறு யாரை வேண்டுமானாலும் பட குழு தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால் தமிழ் நடிகர்களை விட்டுவிட்டு மலையாளத்தில் இருந்து மேத்யூ தாமஸை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

இவங்க தான் விஜய்யோட மாமா பொண்ணா?.. அவங்களும் சினிமா துறையில பிரபலம் தான்..

அதாவது மேத்யூ தாமஸ் திறமையான நடிகராக இருந்தாலும் அவரது தோற்றம் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இளம் வயதில் விஜய் எப்படி இருந்தார் என்பதை பார்த்தால் சுருட்ட முடியுடன் கிட்டத்தட்ட இப்போது மேத்யூ தாமஸ் இருப்பது போன்று தான் இருந்தார்.

இதனால் தான் விஜய்க்கு மகனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மேத்யூ தாமஸை தேர்வு செய்துள்ளனர். அதேபோன்று படத்திலும் இவர்கள் இருவர் இடையே வரும் காட்சிகள் அற்புதமாக இருக்கும். தந்தை மகனுக்கு இடையேயான காட்சி இன்னும் அதிகம் இருந்திருக்கலாம் என்று தோன்றும் அளவிற்கு உண்மையில் ஒரு அப்பா மகனை பார்த்தது போன்றது தான் இந்த படத்தை பார்த்த ரசிகர்களுக்கு இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.