நா வேற எங்க அப்பா வேற!! ஹீரோவாக களமிறக்கும் விஜய் சேதுபதியின் மகன்!!

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, சினிமாவிற்கு அறிமுகமாகி விடுகின்றன. ஆனாலும் அப்படி அறிமுகமாகும் பலரும் நிலைத்து நிற்பது எளிதான காரியம் அல்ல. பாரதிராஜவின் மகன் மனோஜ், சத்யராஜின் மகன் சிபி, இயக்குனர் பி. வாசுவின் மகன் சக்தி , பாக்யராஜின் மகன் சாந்தணு என இது போன்று பலரும் அறிமுகமாகி வெற்றி பெற முடியாமல் தடுமாறி உள்ளனர்.

வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். தளபதி விஜயை அவருடைய அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார் அவருக்கும் ஆரம்பத்தில் சறுக்கல்கள் இருந்தது. ஆனால், அதன் பின் படங்களை அவர் தேர்ந்தெடுத்த விதம், நல்ல கதைகள் என அவரை முன்னோக்கி கொண்டு சென்று இன்றும் அந்த இடத்தை தக்க வைத்துள்ளது.

ஆனால், எந்த வித வழிகாட்டுதலும் இல்லாமல், சொந்த முயற்சியில், முன்னேறியவர் விஜய் சேதுபதி. புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக இருப்பார் விஜய்சேதுபதி. வெளிநாடு சென்று வேலை பார்த்த போதும் சினிமா தான் தன்னுடைய எதிர்காலம் என நினைத்து அதை நோக்கி பயணித்து இன்று மக்கள் செல்வனாக உயர்ந்திருக்கிறார்.

ஹீரோவாக மட்டும் நடிக்காமல், கதைக்கு ஏற்ப எல்லா கதா பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். சமீபகாலத்தில் மக்களின் ஆஸ்தான நாயகன் எனும் பட்டத்தை பிடித்தவர் விஜய் சேதுபதிதான். அவருடைய மகன் சூர்யா ’பீனிக்ஸ்’ (வீழான்) படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் ஏற்கனவே அப்பாவுடன் இணைந்து ’சிந்துபாத்’ எனும் படத்தில் நடித்திருந்தார். இப்போது இளம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டே ஹீரோவாகவும் நடிக்க போகிறாராம்.

vijay sethupathi son

சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை சண்டை பயிற்சி இயக்குனரான அனல் அரசு இயக்குகிறார். அவருக்கும் இயக்குனராக இது முதல் படம். சமீபத்தில் அனல் அரசு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி படம் இந்தியன் -2 மற்றும் ஜவான். அதில் ஜவான் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி மகன் சூர்யாவினை அனல் அரசு சந்தித்திருக்கிறார்.

அப்போது தன்னிடம் இருக்கும் கதைக்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று நினைத்திருக்கிறார். விஜய் சேதுபதியிடம் கேட்கவே அவரும் மகன் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். பீனிக்ஸ் படம் ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக இருக்கும் என்று இப்படத்தின் இயக்குனர் அனல் அரசு தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.