இவங்க தான் விஜய்யோட மாமா பொண்ணா?.. அவங்களும் சினிமா துறையில பிரபலம் தான்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி இருந்த ‘லியோ’ திரைப்படம், அனைத்து தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளையும் முறியடித்தது.

நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் அடுத்தடுத்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருவதுடன் அவருக்கான நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்திக் கொண்டே தான் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல், விஜய் நடிக்கும் படங்கள் தொடர்பான விழா நிகழ்ச்சிகள் வந்தாலே அவர் பேசுவதை கேட்கவே ஒரு கூட்டம் தயாராக இருக்கும். இப்படி அனைத்து ஏரியாவிலும் முன்னணியில் விளங்கி நிற்கும் விஜய், அடுத்ததாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத “Thalapathy 68” என குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
leo vijay

தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, டாப் ஸ்டார் பிரசாந்த், VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

திரைப்படங்களில் அடுத்தடுத்து வேகமாக நடிகர் விஜய் இயங்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், மக்களுக்கான நலத்திட்ட பணிகளையும் அவரது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்து வருகிறார். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்காக நடத்திய விழா, நூலகங்கள் என அடுத்தடுத்து உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
Surendar Family

இதனிடையே, நடிகர் விஜய்யின் மாமா பொண்ணு யார் என்பது பற்றிய சில தகவல்கள் தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. விஜய்யின் தந்தை SAC பிரபல திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவரது மனைவி சோபா சந்திரசேகர் பல பின்னணி பாடல்களையும் பாடி உள்ளார்.

சோபா சந்திரசேகரின் சகோதரர் தான் SN சுரேந்தர். இவர் பின்னணி பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் தனது மருமகன் விஜய் திரைப்படத்தில் சின்ன பையன் சின்ன பொண்ணை காதலிச்சா உள்ளிட்ட ஒரு சில பாடல்களையும் பாடி உள்ளார்.
pallavi with vijay

இவரது மகள் தான் பல்லவி வினோத். இவரும் ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடி உள்ளார். கர்னாடிக் இசையில் சிறந்து விளங்கும் பல்லவி, தனது திருமணத்திற்கு குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் விக்ராந்த், விஜய் அவரின் சித்தப்பா மகன் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும் அவரின் மாமன் மகளான பல்லவி வினோத் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில், விஜய்யுடன் பல்லவி வினோத் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.