பெரிய மகிழ்ச்சி சிறிய விஷயங்களில் உள்ளது… தனது அப்பாவிற்கு பரிசளித்து மகிழ்வித்த பிக்பாஸ் தினேஷ்…

தினேஷ் கோபால்சாமி 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியின் ‘மகான்’ தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘புதுக் கவிதை’, ‘கிழக்கு வாசல்’, ஜீ தமிழில் ‘பூவே பூச்சூடவா’, ‘செம்பருத்தி’, ‘நாச்சியார்புரம்’, ‘கார்த்திகை தீபம்’ ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் ஜெய் நடித்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் இவருடன் நடித்த சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆடுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர். அந்த நேரத்தில் இவர்களது பிரிவு மிகவும் பேசப்பட்டது.

பின்னர் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமானார் தினேஷ். அந்த பிக் பாஸ் சீசனில் பிரதீப் ஆண்டனியின் எலிமினேஷன் உள்ளிருந்த மாயா, பூர்ணிமா திட்டமிட்டு நடத்தினார்கள் என்று மக்கள் கொந்தளித்தனர்.

அந்த நேரத்தில் வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டினுள் வந்து மாயா டீமை எதிர்த்து பல கேள்விகள் கேட்டது, அவர்கள் இவரை சண்டைக்காக தூண்டும் போது தினேஷ் நிதானமாக கையாண்டது மூலமாக மக்களின் ஆதரவைப் பெற்று இறுதிச் சுற்று வரை சென்றார். அவரது குணத்திற்காகவும், பிரிந்த மனைவிக்காக பீல் பண்ணி வருத்தியதற்காகவும் மக்கள் இவரை விரும்பினர்.

தற்போது, தினேஷ் தனது அப்பாவை மகிழ்விக்கிறதுக்காக புதிய ஸ்கூட்டி பைக் ஒன்றை பரிசளித்துள்ளார். பெரிய மகிழ்ச்சி சிறிய விஷயங்களில் உள்ளது என்ற கேப்ஷனுடன் தனது அப்பாவிற்கு பரிசளித்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வயதான தனது அப்பாவிற்கு பரிசளிக்கும் பொது அவர் முகத்தில் வந்த அந்த சிரிப்பு எத்தனை விலை கொடுத்தாலும் ஈடாகாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...