டேட்டிங் செயலியில் கிரெடிட் ஸ்கோரை சேர்க்கும் பெண்கள்.. என்ன மாதிரி விளைவை ஏற்படுத்தும்?

பெண்கள் தற்போது தங்களுடைய கிரெடிட் ஸ்கோரை டேட்டிங் செயலியில் சேர்த்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக டேட்டிங் செயலியில் தங்களுடைய பெயர், வயது, பிடித்தது, பிடிக்காதவை, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஒரு சில விஷயங்களை மட்டும் குறிப்பிடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய வருமானத்தையும் குறிப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது இளம் பெண் ஒருவர் தனது டேட்டிங் செயலி பக்கத்தில் தன்னுடைய கிரெடிட் ஸ்கோர் விபரங்களை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கிரெடிட் ஸ்கோர் 804 என்று இருப்பதை பார்த்து பலர் அவருக்கு லைக் செய்து வருகின்றனர் என்றும் ஒரு சிலர் திருமணம் வரை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நல்ல பொருளாதார நிலையில் உள்ள பெண்ணை பல ஆண்கள் விரும்புவார்கள் என்றும் அந்த டெக்னிக்கை தான் அந்த இளம் பெண் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சுயவிவரத்தில் அவர் 804 என்ற தனது கிரெடிட் ஸ்கோரை பயன்படுத்துவதை பார்த்து ஆண்கள் பலர் அவரை வித்தியாசமாக பார்க்கத் தொடங்கினார். 804 ஒரு சிறப்பான கிரெடிட் ஸ்கோர் என்பதால் அவர் நிச்சயம் ஒரு நல்ல பொருளாதார நிலை கொண்ட பெண்ணாக இருப்பார் என்பதுதான் அனைவரும் கருத்தாக உள்ளது

இதனை அடுத்து அவருடைய பக்கத்திற்கு அதிகமாக லைக் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இதே டெக்னிக்கை பல பெண்கள் பயன்படுத்த தொடங்கினால் தங்களுடைய கிரெடிட் ஸ்கோர் தவறாக குறிப்பிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்த விளைவை யோசிக்கவே அச்சமாக இருக்கிறது என்று சமூக வலைதள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

கிரெடிட் ஸ்கோர் விபரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆபத்தானது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஸ்கிரீன்ஷாட் கிரெடிட் ஸ்கோர் உண்மையானதா என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பு வருகின்றனர்

கிரெடிட் ஸ்கோர் பகிர்ந்து கொள்ளும் பெண் மீது சில ஈர்ப்புகள் அதிகமாக தான் இருக்கிறது என்பதுதான் இப்போது என் நிலவரமாக உள்ளது. பெண்கள் கிரெடிட் ஸ்கோரை பதிவு செய்வது என்ற டெக்னிக்கை அனைவரும் பயன்படுத்த தொடங்கினால் என்ன ஆகும் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews