விப்ரோ சி.இ.ஓவுக்கு தினமும் ரூ.22.7 லட்சம் சம்பளம்.. ஆச்சரிய தகவல்..!

உலகின் முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கை என ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதே நிறுவனங்கள் தங்கள் சிஇஓவுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் முரண் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த சம்பளம் வாங்கும் ஊழியர்களை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நீக்கிவிட்டு சிஇஓக்களுக்கு மட்டும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து வருவது எந்த வகையில் நியாயம் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது சிஇஓவுக்கு தினமும் 22.7 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கி வருவதாக கூறப்படுவது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் 2023ஆம் நிதியாண்டில் ஒரு நாளைக்கு ரூ. 22.7 லட்சம் சம்பாதித்து வருகிறார். அவரது வருட சம்பளம் ரூ.79.66 கோடியாக உள்ளது. இதன் மூலம் இந்திய ஐடி துறையில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
டெலாபோர்ட்டின் சம்பளம் ரூ.20 கோடி சமீபத்தில் உயர்த்தப்பட்டது, இது 2023ஆம் ஆண்டில் அவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செயல்பாட்டதற்காக வழங்கப்பட்டது. விப்ரோவின் வருவாய் நிதியாண்டில் 22.9% அதிகரித்து ரூ.2.5 டிரில்லியன் ஆகவும், நிகர லாபம் 20.7% அதிகரித்து ரூ.28,192 கோடியாகவும் இருந்தது.

டெலாபோர்ட்டின் சம்பளம் சிலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறாது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை தேய்ந்தும், உலகளாவிய போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் பல சவால்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் சி.இ.ஓ சம்பளம் மிகையானது என்று சிலர் வாதிடுகின்றனர். இருப்பினும், விப்ரோ டெலாபோர்ட்டின் சம்பளத்தை குறைக்கும் திட்டம் எதும் அந்நிறுவனத்திடம் இருந்து தெரிய வருகிறது.

டெலாபோர்ட்டின் அடிப்படை சம்பளம் குறித்த தகவல்கள் இதோ:

* அடிப்படை சம்பளம்: ரூ.3.2 கோடி
* போனஸ்: ரூ.20 கோடி
* பங்கு விருதுகள்: ரூ.56.46 கோடி

மொத்தத்தில், டெலாபோர்ட்டின் சம்பளம் வருடத்திற்கு ரூ.79.66 கோடி. இது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.22.7 லட்சத்துக்குச் சமம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews