விண்டோஸ் 11ல் புதிய அப்டேட்டுக்கள்.. என்னென்ன தெரியுமா?

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது இதில் அப்டேட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்குள் புதிய வகை அப்டேட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவை என்னென்னவாக இருக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.

புதுப்பிக்கப்பட்ட விட்ஜெட்: புதிய விட்ஜெட்களைக் கண்டுபிடித்து அதனை ஒரு குழுவாக ஒன்றாக்கும் வகையில் புதிய அப்டேட் வரவுள்ளது. இதனால் உங்களுக்குத் தேவையான அனைத்து விட்ஜெட்டுக்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

பழைய மொபைலை விற்கும் முன் ரீசெட் செய்வது எப்படி? முழு விவரங்கள்..!

வானிலை ஐகான்கள்: டாஸ்க்பார் ஓப்பன் ஆனதும் வானிலை ஐகான்கள் தெரியும். இதில் தற்போதைய வானிலை நிலை மற்றும் சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம்,

டாஸ்க் பாரில் Bing AI: மைக்ரோசாப்டின் Bing AI டாஸ்க்பாரிலேயே இனி கிடைக்கும். பிரெளசரை ஓப்பன் செய்யாமலேயே Bing AI மூலம் இணையத்தில் தகவல்களை விரைவாகத் தேட இந்த அப்டேட் உதவும்.

மல்டி-ஆப் கியோஸ்க் பயன்முறை: இது உங்கள் கம்ப்யூட்டரை குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு லாக் செய்ய அனுமதிக்கிறது. உங்கள் ஊழியர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சில விஷயங்களை பார்க்க முடியாதவாறு செய்யலாம். வணிகர்களுக்கு இது பெரிதும் உதவும்.

சாம்சங் நிறுவனத்தின் அட்டகாசமான டேப்லெட்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

மேற்கண்டவை அனைத்தும் விண்டோஸ் 11 அடுத்த அப்டேட்டில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில சிறந்த புதிய அம்சங்கள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த அம்சங்களுடன் கூடுதலாக, மேம்படுத்தலில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பல மேம்பாடுகள் உள்ளன. இவற்றில் அடங்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews