தீபாவளி திருநாளில் நீங்கள் செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுதான்..!

இன்று (அக்.24) தீபாவளி. அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நீர்நிலைகளில் கங்கா தேவி வாசம் செய்கிறாள் என்று குறிப்பிடப்படுகிறது.

அந்த நேரத்தில் நாம் எண்ணைத் தேய்த்துக்குளிக்கும் போது நல்ல ஒரு ஆற்றலை உங்களுக்குள் உண்டு பண்ணும்.

கங்காதேவியின் பூரணமான அருளையும் இது பெற்றுத் தரும். நமது பாவங்களை எல்லாம் போய் ஒரு புனிதத்தன்மையை நாம் அடைவோம்.

oil bath
oil bath

கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் காலையில் வழிபாட்டை முடித்து விட வேண்டும். லட்சுமி குபேர பூஜையானது தீபாவளி அன்று மாலையில் செய்ய வேண்டியது உத்தமம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா வீட்டுக்கு மகாலெட்சுமியின் அருள் கிடைக்க மாலையில் அகல்விளக்குகளை ஏற்றி வழிபட வேண்டும். இது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும்.

கார்த்திகை திருநாள் மாதிரி இன்றும் நீங்கள் வீடு முழுவதும் விளக்கேற்றலாம். நம் மனதில் சூழ்ந்துள்ள இருள் அகல்வதைப் போல நம் வீட்டைச் சூழ்ந்துள்ள இருளும் அகன்று அங்கே ஒரு ஒளி பிறக்கிறது.

sakkaram
sakkaram

இது ஈகைப் பண்பு உள்ள நாள். அதாவது இருப்பவர்கள் இல்லாதவர்க்குக் கொடுக்க வேண்டும். சின்ன சின்ன வியாபாரிகளிடத்தில் பொருள்கள் வாங்கலாம்.

மனமகிழ்ச்சியை உண்டாக்குகிற பண்டிகை தான் தீபாவளி திருநாள். தான தர்மம் செய்வதற்கு ஏற்ற நாள் இது என்றால் மிகையில்லை.

காலையிலேயே நாம் நீராடி விட்டு ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அங்கு விளக்கேற்றி வழிபாட்டைச் செய்து வாருங்கள். இது நம் மனதில் ஆற்றலை மட்டுமல்லாமல் அக இருளைப் போக்கவும் செய்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews