வாழ்க்கையில் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட அரை நிமிடம் ஒதுக்கி இப்படி வழிபடுங்க…

இது விடுமுறை காலம் என்பதால் ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்டியது போன்ற கருணையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்று அவர் தனது திருப்புகழில் பதிவு செய்துள்ளார். அரை நிமிடம் உள்ளம் உருகி உண்மையான காதலுடன் வேறு எதுவும் வேண்டாம்.

நீ மட்டும் போதும் என்று யார் ஒருவர் வேண்டுகிறார்களோ அவர்களுக்கு எல்லாமே கிடைக்கும். கடவுளிடம் போய் முறையிடுபவர்கள் நீண்ட பட்டியலுடன் தான் செல்கிறார்கள். ஆனால் கடவுளுக்குத் தெரியாதா… நமக்கு என்ன தர வேண்டும் என்று.

இறைவன் கொடுப்பது எதுவாக இருந்தாலும் அது உயர்வாக, நல்லதாக இந்த ஆன்மாவுக்கு எது தேவையோ அதைத் தாய் போல தருவார். முருகன் 12 கைகளில் தருவார். கேட்டவருக்கு மட்டுல்ல.. நினைத்தவருக்கும் நினைத்த வரத்தைத் தருவார்.

இதையும் படிங்க… உங்களுக்குள் ஞானம் பிறக்க… எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடலை மட்டும் கேளுங்க..!

அப்பேர்ப்பட்ட வள்ளல் முருகன். அவர் வள்ளல் என்றால் அவள் வள்ளி. அப்படி கணவனும், மனைவியும் கொடுப்பதற்குப் போட்டிப் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். அதனால் அவரை அரை நிமிடமாவது நாம் நினைக்க வேண்டும். முருகப்பெருமானை முழுமையான ஒரு ஆன்மா சரணாகதி அடைந்து நீ என்ன கொடுத்தாலும் சரி.

என்னை உன் அடியாராக மெய்த்தொண்டராக என்னை ஏற்றுக்கொள் என்று முருகப்பெருமானிடம் கோரிக்கை வைத்து விட்டு இந்த திருப்புகழை சொல்லிப் பாருங்கள். என்னவெல்லாம் கொடுப்பார் என்று இந்தத் திருப்புகழிலேயே அருணகிரி நாதர் சொல்லியிருக்கிறார்.

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட முட மட்டி பவவினையிலே சனித்த
தமியன்மிடி யால் மயக்க முறுவேனோ
கருணைபுரி யாதிருப்ப தெனகுறையி வேளை                                                                                    செப்பு

கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே                                                                              செச்சை
கமழுமண மார்கடப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீற்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு

தலைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான வித்த மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே

என்கிறார் அருணகிரிநாதர்.

இந்தப்பாடலில் அரை நிமிஷ நேரம் நினைக்காததால் தான் இன்று நான் கஷ்டப்படுகிறேன் என்கிறார். அதே நேரத்தில் அரை நிமிஷ நேரம் நினைத்தால் என்னவெல்லாம் கிடைக்குமோ அதையும் இந்தப் பாடலில் சொல்லி இருக்கிறார் அருணகிரிநாதர்.

அரை நிமிஷம் இப்படி நினைக்கவில்லை என்றால் திரும்ப திரும்ப பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான் என்றும் சொல்கிறார். இன்பம், துன்பம், வறுமை, இறப்பு என எல்லாம் வரும். என்னால் இந்தத் துயரைப்பட முடியாது.

உன் திருவடி நிழலில் எனக்கு இடம் கொடு. என் வாழ்க்கையில் எனக்கு எல்லா நலனும் கிடைக்கணும் என்று வேண்டுகிறார் அருணகிரி நாதர். இந்தத் திருப்புகழை அன்றாடம் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி வழிபட்டால் உங்களுக்குக் கண்டிப்பாக எல்லா நலன்களும் கிடைக்கும்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews