ஐபோனில் வாட்ஸ் அப் எடிட் மெசேஜ்.. எப்படி எடிட் செய்ய வேண்டும்? முழு விவரங்கள்..!

வாட்ஸ்அப் சமீபத்தில் எடிட் மெசேஜ் என்ற சிறப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அம்சம் பயனர்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் மாற்றங்களைச் செய்ய உதவுகிறது. பயனர்கள் ஏதேனும் தவறான செய்தி அனுப்பியிருந்தால் அல்லது பயனர்கள் தாங்கள் ஏற்கனவே அனுப்பிய செய்திகளில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என்றாலும் இப்போதைக்கு ஐபோன் பயனர்களுக்கு கிடைத்துள்ளது.

ஐபோனில் வாட்ஸ் அப் செய்தியை எடிட் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

1. வாட்ஸ் அப் பயன்பாட்டைத் திறந்து, நீங்கள் திருத்த விரும்பும் செய்தி அமைந்துள்ள பகுதிக்கு செல்லவும்.
2. நீங்கள் திருத்த விரும்பும் செய்தியை சிறிது நேரம் அழுத்த வேண்டும்.
3. ஒரு மெனு தோன்றும். அதில் எடிட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
4. செய்தியில் நீங்கள் விரும்பும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்
5. “அனுப்பு” என்பதைத் தட்டவும்.

திருத்தப்பட்ட செய்தி அதன் அருகில் “Edited” என்ற வார்த்தையுடன் காட்டப்படும். செய்தியைப் பெறுபவர் செய்தி திருத்தப்பட்டிருப்பதைக் காண முடியும்.

வாட்ஸ்அப் எடிட் மெசேஜ் அம்சத்தைப் பற்றி மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இதோ:

* நீங்கள் அனுப்பிய செய்திகளை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் மட்டுமே திருத்த முடியும்.
* குரூப் சேட்டிங் செய்தால் அதில் இந்த எடிட் செய்தி வசதி இல்லை.

* செய்தியைப் பெறுபவர் தனது வாட்ஸ்அப் செயலியை சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவில்லை என்றால், அவர்களால் திருத்தப்பட்ட செய்தியைப் பார்க்க முடியாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...