சினிமாவில் கால்ஷீட் என்று சொல்கிறார்களே? கால்ஷீட் என்றால் என்ன தெரியுமா?

சினிமா என்பது ஒரு கனவு தொழிற்சாலை. இயக்குனரின் கனவு நனவாகுவது தான் சினிமா. அந்த சினிமா வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் ஒரு நபர் கையில் இல்லை. நடிகர் முதல் இயக்குனர் வரை நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிர கணக்கான நபர்களின் உழைப்பு தான் சினிமா.

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அல்லது அரசு வேலை பார்ப்பவர்களுக்கு மாத சம்பளம் உண்டு. ஒரு மாதம் முழுவதும் வேலை பார்த்தால் அவர் விடுமுறை எடுத்த நாள்களை கழித்துவிட்டு சம்பளமாக வழங்கப்படுவது உண்டு.

ஆனால் சினிமாவில் மாத சம்பளம் என்பது கிடையாது. கால்ஷீட் முறைதான் கடைபிடிக்கப்படும். கால்ஷீட் என்பதை பலர் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே கால்ஷீட் என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? என்பது பலருக்கு தெரிந்திருக்காது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

12 வயதில் சிவாஜி ரசிகை… சினிமாவே வேண்டாம்… அமெரிக்கா சென்ற நடிகை பிரமிளா..!!

call sheet2

கால்ஷீட் என்பது நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களுடன் செய்து கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தம். காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நடித்தால் அல்லது வேலை பார்த்தால் அது ஒரு கால்ஷீட். அதே மாதிரி மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நடித்தால் அது இன்னொரு கால்ஷீட். இரவு 9 மணி தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடித்தால் அதுவும் இன்னொரு கால்ஷீட்.

இந்த மூன்று விதமான கால்ஷீட்களில் தான் நடிகர் நடிகைகள் நடிப்பார்கள். சில நேரங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நடிகர் அல்லது நடிகை நடித்தால் அல்லது டெக்னீசியன்கள் வேலை பார்த்தால் அது ஒன்றரை கால்ஷீட் என கூறப்படும்.

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகிறார் என்றால் 60 நாட்கள் கால்ஷீட் கொடுக்கிறார் என்றால் 60 நாட்களிலும் அவர் தினமும் 6 அல்லது 7 மணி நேரம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்பது பொருள். ஒரு சிலர் இரண்டு கால்ஷீட் மூன்று கால்ஷீட் என நடிப்பதுண்டு.

சிவாஜி கணேசன் உச்சத்தில் இருந்த போது மூன்று கால் சீட்டுகளில் அதாவது காலை 7 மணி முதல் இரவு 1 மணி நடித்ததாக கூறப்படுவது உண்டு. அதேபோல் நகைச்சுவை நடிகர்கள் இரண்டு அல்லது மூன்று கால்ஷீட்களில் சர்வ சாதாரணமாக நடிப்பார்கள். கவுண்டமணி செந்தில் மூன்று கால்ஷீட்களில் பல வருடங்கள் நடித்ததாக கூறப்படுவது உண்டு.

நடிகர் நடிகைகளுக்கும் சம்பளம் கணக்கிடப்படுவது கால்ஷீட் அடிப்படையில். ஒரு கால்ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளம் என்று கணக்கிடுவது ஒன்று. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள் கால்ஷீட் கொடுத்தாலும் கால்ஷீட் கணக்கு படி சம்பளம் வாங்குவதில்லை, மொத்தமாக ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு என்று வாங்கிக் கொள்வார்கள். அவற்றின் ஒரு தொகையை அட்வான்ஸ் ஆகவும் பெற்றுக் கொள்வார்கள்.

தமிழ் சினிமாவின் அப்பா நடிகர்.. எஸ்.வி. ரங்காராவ் திரைப்பயணம்..!!

call sheet1

ஆனால் சின்ன சின்ன நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், நடிகைகள் கால்ஷீட் கணக்கின்படி தான் சம்பளம் பெறுவார்கள். ஒரு கால்ஷீட்டுக்கு இவ்வளவு என்று கணக்கு செய்யப்பட்டு எத்தனை நாள் நடிக்க வேண்டுமோ அத்தனை நாட்களுக்கு உண்டான பணத்தை அவர்கள் சம்பளமாக பெறுவார்கள். 1000 ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை ஒரு கால்ஷீட்டுக்கு சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் உண்டு.

அதேபோல் இரவு கால்ஷீட்களில் நடிப்பவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சில வசதிகளை செய்து கொடுப்பார்கள். குறிப்பாக சாண்ட்விச், ஸ்நாக்ஸ், டீ, காபி ஆகியவை இடையில் வரும். இரவு கால் சீட் என்பது 9 மணி முதல் 2 மணி வரை என்பதால் இரவு 11 மணி அல்லது 12 மணிக்கு அந்த செட்டில் உள்ள அனைவருக்கும் டீ, காபி மற்றும் சாண்ட்விச் போன்ற ஸ்நாக்ஸ் கிடைக்கும்.

வில்லன் நடிகரை திருமணம் செய்த காமெடி நடிகை லலிதா குமாரி.. விவாகரத்து பின்னும் தைரியமான முடிவு..!

சினிமாவை பொறுத்தவரை கால்ஷீட் என்பது மிகவும் முக்கியமானது. ஒருநாள் படப்பிடிப்புக்கு 10 பேர் கால்ஷீட் கொடுத்திருந்தார்கள் என்றால் அதில் ஒரே ஒருவர் வரவில்லை என்றாலும் அன்றைய படப்பிடிப்பு ரத்தாகும். 9 பேரின் கால்ஷீட்கள் வீணாகும். வீணாகும் கால்ஷீட்டுக்கு பதிலாக நட்சத்திரங்கள் மீண்டும் ஒரு நாள் தரமாட்டார்கள், அப்படியே தந்தாலும் அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும். படப்பிடிப்பு ரத்தானாலும், அவர்கள் நடிக்க செட்டுக்கு வந்துவிட்டால், அவர்கள் வேலை செய்ததாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே கால்ஷீட் கொடுத்த ஒரு நடிகர் வரவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அன்றைய தினம் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...