குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!

தற்போது எல்லாம் குடும்பங்களில் தினமும் ஒரே சண்டை சச்சரவாகத் தான் நடக்கிறது. அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக ஒற்றுமையுடன் இருந்தார்கள். ஒரே வீட்டில் 10 முதல் 15 பேர் வரை தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, மைத்துனன், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா என பார்ப்பதற்கே ஒரு ஆனந்தமாக இருக்கும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டால் வீடே களை கட்டும். ஆனால் இப்போது எல்லாருமே தனிக்குடித்தனத்திற்கு வந்து விட்டனர்.

அப்படி வந்தால் நிம்மதி என்று நினைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளே ஆயிரம் ஆயிரம் சண்டைகள். என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்க்கையில் திணறி வருகின்றனர். அவர்களால் சில விஷயங்கைள சொல்லவும் முடியவில்லை. மெல்லவும் முடியவில்லை.

இப்படி இருப்பவர்கள் வாழ்வில் நிம்மதி அடைய வேண்டுமா? குடும்பத்தில் தந்தைக்கும் தாய்க்கும், பிள்ளைகளுக்கும் இடையே சண்டையா? மனநிம்மதி இல்லையா? நீங்கள் தவறாமல் வரும் தைப்பொங்கலுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அது என்ன வழிபாடு? எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதையும் படிங்க… 16 லட்சம் மட்டுமில்லை பூர்ணிமாவுக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?.. வேறலெவல் பாஸ்!

அதுதான் கன்னி வழிபாடு. வீட்டில் கன்னியாகவே இறந்து போனவர்கள் நம் மூதாதையர்களில் கூட யாராவது இருக்கலாம். அப்படிப்பட்டவர்களின் மனதைக் குளிர்விக்க வேண்டும். அதற்கு அந்த வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்கான வழிபாட்டை முறைப்படி செய்ய வேண்டும்.

இறந்த பெண் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். சிறுமிகளுக்கு அதற்கேற்ற ஆடைகளும், இளம் பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், அதை விட பெரிய பெண்ணுக்கு சேலை, சட்டையும் வாங்கி வைத்து வணங்குவார்கள். அந்திக் கருக்கலில் கன்னியை வணங்க துவங்குகிறார்கள்.

எப்படி வழிபடுவது?

இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள். இந்த நார்ப்பெட்டிக்கு கன்னிப்பெட்டி என்று பெயர்.

கன்னிப்பெட்டியை வைக்கும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர். தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு கும்பிடுபவர்களுககு கிடைக்கும்.

பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார்பெட்டியை வைத்து விடுவார்கள். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். கன்னி பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள்.

இதையும் படிங்க… உஷாரா பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா!.. இந்த வாரம் பல்பு வாங்கப் போற அந்த 2 பேர் யாரு தெரியுமா?

கன்னிப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள்.

இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர்கள் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது. துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னியைக் கும்பிட்ட துணி கிடைக்காது.

வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண். தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று கன்னி தெய்வங்களின் எழுதப்படாத சட்டம். குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னி வழிபாடு ஒரு சான்று.

Kanni Theivam
Kanni Theivam

இன்றைய நவீன காலத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் பொருள் தேட வெளிநாடுகள், வெளிமாநிலம் என்று சென்று விடுகின்றனர். எப்போதாவது கல்யாணம், கோயில் கொடை என்றால் கூட அவர்கள் ஒன்று சேருவது கடினம். ஆனால் கன்னி தெய்வம் குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடு என்பதை மறந்துவிடக் கூடாது.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்யவேண்டும். பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே படையலில் இதுபோன்ற இனிப்பு பலகாரங்கள் அவசியம் இடம்பெற வேண்டும். அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு இடத்தில் இலையை போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார். இந்த சமபந்தி விருந்து கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.