உஷாரா பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா!.. இந்த வாரம் பல்பு வாங்கப் போற அந்த 2 பேர் யாரு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடத்தி டைட்டில் வின்னரை பொங்கலுக்கு முன்பு அறிவிக்க உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் கம்பி நீட்டியுள்ளார் பூர்ணிமா ரவி. எப்படி இருந்தாலும் தனது தோழி மாயாவுக்கு டைட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இவர் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறி விட்டார். ஆனால் ட்விஸ்ட் என்னவென்றால் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பதே மாயா தான்.

இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டில் உள்ள அனைவருமே நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். விசித்ரா, அர்ச்சனா, மணி, மாயா, தினேஷ், பூர்ணிமா ரவி மற்றும் விஜய் வர்மா. இதில் பூர்ணிமா ரவி வெளியேறிவிட்ட நிலையில் மீதம் உள்ள ஆறு பேரில் 4 பேர் இறுதி வாரத்துக்கு செல்ல உள்ளனர். ஏற்கனவே கிராண்ட் பினாலே டிக்கெட்டை வென்று விஷ்ணு இறுதி வாரத்துக்குள் முதல் ஆளாக நுழைந்து விட்டார்.

இந்நிலையில், பூர்ணிமா வெளியேறிய பின்னரும் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி உள்ள ஆன்லைன் கருத்துக்கணிப்புகளில் குறைவான ஓட்டுகளுடன் மாயா மற்றும் விஜய் வர்மா கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர்.

மாயா, விஜய் வர்மா அவுட்:

அவர்களை தொடர்ந்து விசித்ராவின் வாக்கும் அதிக அளவில் சரிந்துள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த விஷ்ணுவை தவிர்த்து அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிக வாக்குகளுடன் அர்ச்சனா முதலில் சேவ் ஆவார் என தெரிகிறது. டைட்டில் வின்னரும் இந்த சீசனில் அர்ச்சனா தான் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

அர்ச்சனாவை தொடர்ந்து மணி அதிக வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். தினேஷ் மூன்றாவது இடத்திலும் விசித்ரா நான்காவது இடத்திலும் உள்ளனர். ஒருவேளை விஜய் டிவி இந்த வாரமும் மாயாவை காப்பாற்றினால் விசித்ரா மற்றும் விஜய் வர்மா வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷூட்டிங் நடைபெற உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய அந்த இரண்டு பேர் யார் என்கிற தகவல் விரைவில் லீக் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews