16 லட்சம் மட்டுமில்லை பூர்ணிமாவுக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?.. வேறலெவல் பாஸ்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 97 நாட்களை கடந்துள்ள நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் பூர்ணிமா ரவி வெளியேறியுள்ளார். ஆரத்தி எனும் youtube சேனல் மூலம் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். அதே அளவுக்கு ஹேட்டர்களும் அதிகரித்தனர். மாயாவுடன் நட்பாக பழகி வந்த பூர்ணிமா ரவி கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி சம்பவமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பூர்ணிமா கிரேட் எஸ்கேப் ஆகியுள்ளார்.

16 லட்சம் பணப்பெட்டி:

பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா ரவி ஏகப்பட்ட ஆபாச வார்த்தைகளை பேசி வந்த நிலையில், அவர் மீது ரசிகர்கள் அதிக அளவில் ட்ரோல்களையும் குவித்து வந்தனர். பூர்ணிமா ரவிக்கு சோசியல் மீடியாவில் பயங்கர கெட்ட பெயரும் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், எப்படியும் ரசிகர்கள் தனக்கு ஓட்டு போட்டு டைட்டில் வின்னராக ஆக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு புத்திசாலித்தனமாக 16 லட்சம் ரூபாய் எனும் பெரிய தொகை வைக்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாமர்த்தியமாக வெளியேறி விட்டார்.

14 லட்சம் சம்பளம்: 

பூர்ணிமா கிட்டத்தட்ட 97 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ள நிலையில் ஒரு நாளைக்கு அவருக்கு சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஒட்டுமொத்தமாக 14 லட்சம் ரூபாய் சம்பளம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

16 லட்சம் ரூபாய் பணப்பெட்டி மற்றும் 14 லட்சம் ரூபாய் சம்பளம் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ரூபாய் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமாவுக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் இருந்து தன் சொந்த வீட்டுக்கு சென்ற பூர்ணிமா ரவிக்கு ரோஜா பூ மாலை எல்லாம் அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.

விஜயகாந்துக்கு அஞ்சலி:

பூர்ணிமா அம்மாவிடம் வாக்கு கொடுத்த நிலையில் அவர் குறித்து எதுவும் பேச மாட்டேன் என பிரதீப் ஆண்டனி போட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி நேற்று இரவு கேப்டன் விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்த காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

டப்ஸ்மாஷ் மூலமாக பிரபலமானவர் பூர்ணிமா ரவி. அதன் பின்னர் யூடியூப் சேனல், சில படங்களில் தலைகாட்டியது என கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை சேர்த்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.