தாய்மார்கள் பெண்குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்…!

அந்தக்காலத்தில் பாட்டிமார்கள் புதிதாக திருமணமான பெண்ணிடம் அடியே…ய்…உன் புருஷனை முந்தானைக்குள் முடிஞ்சு வைச்சிக்கோ…அதுதான் உனக்கு நல்லதுன்னு ரகசியமாகச் சொல்வார்கள். அது சரி…பாட்டி சொல்லிவிட்டு போய் விட்டார்கள். அதை எப்படி நிறைவேற்றுவது?

இன்று பொண்டாட்டி ஒண்ணு சொன்னா புருஷன் ஒண்ணு சொல்றாரு. புருஷன் ஒண்ணு சொன்னா பொண்டாட்டி ஒண்ணு சொல்றாங்க.
இதை எப்படி கட்டுப்படுத்துவது? இருவருக்கும் இடையே புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததைத் தான் காட்டுகிறது. இதற்கு தான் அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக இருந்தார்கள்.

அவ்வப்போது இப்படி வரும் பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து கணவனிடம் பக்குவமாக மனைவி எப்படி நடக்க வேண்டும் என்றும் மனைவியின் அன்பு மனதைப் புரிந்து கொண்டு கணவன் எப்படி நடக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சொல்லிக் கொடுப்பார்கள். இதனால் பெரும்பாலான வீடுகளில் பிரச்சனைகளுக்கே இடமில்லாமல் போய் விடும். எப்போதும் சந்தோஷம் பொங்க குதூகலமாக இருப்பார்கள்.

pottu
pottu

கணவனை எப்போதும் தனது சுவாசமாகக் கொண்டவள் சுவாசினி என்று சொல்வார்கள். அம்பிகைக்கு சுவாசினி என்றே பெயர். அவள் எப்போதும் மங்களகரமாக இருப்பதால் மங்களாம்பிகை என்றும் சொல்வர். மலையாள் என்னும் அம்பிகை சங்குகளால் உருவான வளையல்களை அணிந்துள்ளார்.

நெற்றியில் திலகம் இதுவே முதலில் பெண்களுக்கு அணிகலன்களாகச் சொல்லப்படுகிறது. பெண்கள் நாகரிகம் என கருதி பொட்டு வைப்பது சுருங்கிப் போய் விட்டது. பொட்டை நாகரிகம் கருதாமல் பெரிதாக வையுங்கள். பெண் பிள்ளைகளுக்கு இதைக் குறிப்பாகச் சொல்லிக் கொடுங்கள்.

கழுத்தில் தாலி, காலில் மெட்டி காதில் தோடு, கைகளில் வளையல்கள் என பெண்கள் 5 அணிகலன்களைக் கண்டிப்பாக அணிய வேண்டும்.
இவை இல்லாமல் யாருக்கும் சாப்பாடு கூட பரிமாறக்கூடாது. வீட்டைத்தாண்டி வெளியே போகக்கூடாது.

bangles
bangles

இவை எல்லாவற்றையும் அம்பாள் அணிந்துள்ளதனால் தான் சர்வ மங்கள ரூபினியாக விளங்குகிறாள். வளையல் போய் போய் வரும்போது கடல் அலைகள் போல போய் போய் வருகிறதாம்.

சகல கலை மகள் என்றால் அம்பிகை தான். 64 கலைகளையும் அறிந்தவள். தாவி வந்த கங்கையை தனது முடி மேல் அடக்கிய சிவபெருமானையே தன்னுள் அடக்கி தனக்குள் வைத்திருக்கும் வித்தையை அறிந்தவள் தான் அம்பிகை.

திருமணமான பெண்ணின் வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் என்னவென்றால் கணவனை தனது முந்தானைக்குள் முடிஞ்சு வைத்துக் கொள்வது. தங்கநிறத்தையும், கரிய நிறத்தையும் உடையவள். சிவப்பு, வெள்ளை, பச்சை நிறம் கொண்டவள். 5 நிறங்களைத் தனக்குள் கொண்டவள் தான் அம்பிகை என்கிறார் அபிராம பட்டர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.