கன்னி துடியாக இருப்பதை அறிந்து கொள்வது எப்படின்னு தெரியுமா? செய்வினை கோளாறை நீக்கும் வழிபாடு இதுதான்…

மூதாதையர்களில் யாராவது கன்னியாக இருக்கும் போது இறந்தால் அவர்களை வழிபடுவது தான் கன்னி வழிபாடு. நோய் நொடிகள் எதுவும் வராது. குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். வீட்டில் துர்மரணங்கள் நேராது. எல்லாவற்றிற்கும் மேலாக வாரிசுகளின் வாழ்க்கையானது வெகு சிறப்பாக அமையும்.

இதற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உறவைத் தேடி ஓடி வருகிறார்கள். பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு எப்போதும் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. கன்னிகளுக்கும் அந்த ஆசை உண்டு.

இதையும் படிங்க… நடிகர் திலகம் சிவாஜி முடியாது எனக் கூறிய வசனத்தை அசால்ட் ஆக பேசிக் காட்டிய டி எம் எஸ்!

கன்னி ஆனவள் தன் வீட்டில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும் என ஆசைபடுவாள். அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும் வரம் கொடுப்பார். இப்போது பல மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் இடத்துக்கே கன்னியைக் கொண்டு சென்று வைத்து வணங்கி வருகிறார்கள்.

பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடீர் திடீரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்.

Crying child
Crying child

கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது. குழந்தைகளுக்கு கல்வி, செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து.

கன்னி வழிபாடுகளில் பல கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் பல கதைகள் மனதை உருக்குவதாகவே உள்ளன. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த சிறுமி ஒருவள் இறந்து விட்டால் ஆண்டு தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவாடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவாடை சட்டைதானா… போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க, அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை, சட்டை வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னிதெய்வம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மறைந்து வாழும் குழந்தையாகவே வணங்கப்படுகிறது.

ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அந்த வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்ததாம். ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூறி இருக்கிறார்.

அதன்படி, கன்னியை வணங்கி கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகே அழுகை நின்றதாம். இதுபோல் கன்னி தெய்வங்கள் இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க… கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை ஓரம் கட்ட ஜெயலலிதாவை களம் இறக்கிய எம்ஜிஆர்!

தற்போது பனை தொழில் முழுவதும் குன்றி விட்டது. நார் பெட்டி போன்ற பொருள்கள் காட்சி பொருளாக மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்திலும் கன்னி நார் பெட்டி மட்டும் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

பல கிராமங்களில் பல வீடுகளில் இந்த நார் பெட்டி பல வண்ணத்தில் தொங்கி கொண்டிருப்பதை நாம் காணலாம். பழமையை பறைசாற்றும் இந்த வழிபாடு, பல வரலாறுகளை சுமந்து கொண்டு தமிழரின் பண்பாட்டை இன்று வரை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.