நடிகர் திலகம் சிவாஜி முடியாது எனக் கூறிய வசனத்தை அசால்ட் ஆக பேசிக் காட்டிய டி எம் எஸ்!

தமிழ் சினிமாவில் 1972 ஆம் ஆண்டு பி மாதவன் இயக்கத்தில் வெளியான படம் தான் ஞான ஒளி. சிவாஜி கணேசன், விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீதர், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு வியட்நாம் வீடு சுந்தரம் கதை, திரைக்கதை எழுதியிருந்தார். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் அமைந்த எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். கண்ணதாசன் இந்த பாடத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தார்.

இந்த படத்தின் மையக்கதை ஆண்டனி என்ற சிலுவை செய்யும் தொழிலாளியாக சிவாஜி நடித்திருப்பார். சிவாஜியின் நண்பராகவும் ஐபிஎஸ் அதிகாரியாகவும் மேஜர் சுந்தர்ராஜன் இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பார். சிவாஜி மீது பல குற்ற செயல்கள் இருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மேஜர் சுந்தர்ராஜன் பலமுறை முயற்சி செய்து வருவார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவருடைய முயற்சியை வீணாகிவிடும். இந்த நேரத்தில் தான் மேஜர் சுந்தர்ராஜன் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். அதன் பின் மீண்டும் ஊர் திரும்பும் பொழுது நடிகர் சிவாஜி வேறு மாதிரியாக மாறி இருப்பதை அவர் உணர்வார்.

அருண் என தனது பெயரை மாற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு நன்மை செய்யும் ஒரு பெரும் பணக்காரனாக சிவாஜி மாறி இருப்பார். சிவாஜியை நேருக்கு நேர் பார்க்கும் மேஜர் சுந்தர்ராஜனுக்கு தன் நண்பனை எப்படி கைது செய்வது என ஒரே யோசனையாக இருக்கும். ஆனால் அதற்காக ஒவ்வொரு முறையும் அவரை கைது செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் அந்த முயற்சி தோல்வியில் சென்றடைகிறது. அதே நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜியும் தன் நண்பரே தன்னை கைது செய்ய நினைக்கிறான் என வருத்தப்படுவதா அல்லது நல்ல நிலையில் இருந்து பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருவதை நினைத்து சந்தோஷப்படுவதா என ஒன்றும் புரியாமல் தன் மனதிற்குள் பல குழப்பத்துடன் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

விஜயகாந்திற்கு இரங்கல் அறிக்கை விடாமல் வெளிநாட்டில் குத்தாட்டம் போடும் தல.. அஜித்தை விளாசித் தள்ளிய விமர்சகர்!

அந்த நேரத்தில் சிவாஜியின் மனதில் இருந்து பாடும் படியான ஒரு பாடல் தான் தேவனே என்னை பாருங்கள் என்ற பாடல். டி எம் சௌந்தரராஜன் பாடிய இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்த பாடலுக்கு இடையில் வரும் வசனங்கள் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் பிரிந்து சென்று விட்டனர், மீண்டும் சந்தித்த பொழுது பேச முடியவில்லை என்ற வசனம் தற்போது உள்ள நடைமுறை காலங்களில் மீம்ஸ் களிலும், காமெடிகளிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த பாடல் பதிவு செய்யும் பொழுது இடையில் வரும் இந்த வசனத்தை நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பேசிக்கொள்ளலாம் என படக்குழு முதலில் முடிவு செய்திருந்தது.

அதன் பின் சிவாஜியால் சில காரணங்களினால் இந்த பாடல் பதிவின்பொழுது கலந்து கொள்ள முடியவில்லை. அதன்பின் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் வைத்து இந்த டயலாக்கை கூறிவிடலாம் என படக்குழு நினைத்தது. அந்த முயற்சி சரியாக அமையவில்லை என்ற காரணத்தினால் அதன் பின் பாடகர் டி எம் எஸ் நானே அந்த வசனத்தை கூறிவிடுகிறேன் எனக்கூறி சிறப்பாக பேசி இருப்பார். நடிகர் திலகம் சிவாஜியின் பாடலிற்கு குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரின் வசனத்தை பேசியதும் ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews