அர்ஜூனிடம் உதவி இயக்குனராக இருந்த விஷால்.. திடீரென ஹீரோவான கதை.. ‘செல்லமே’ உருவானது எப்படி?

தமிழ் திரை உலகில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் ஜி.கே.ரெட்டி. அவருடைய மகன் தான் விஷால். விஷால் குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு நடிக்க வேண்டும் என்பதில் சிறுவயதில் ஆசை இல்லை. அவர் இயக்குனராக வேண்டும் என்றுதான் விரும்பினார். அதற்காகத்தான் அவர் அர்ஜூன் இயக்கத்தில் உருவான ‘வேதம்’ என்ற படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அந்த படத்தில் அவருடைய பணியை பார்த்த அர்ஜுன் கண்டிப்பாக நீங்கள் ஒரு பெரிய இயக்குனராக வருவீர்கள் என்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் ‘வேதம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இயக்குனர் காந்தி கிருஷ்ணா, விஷாலை பார்த்து தன்னுடைய அடுத்த படத்திற்கு இவர் நிச்சயம் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்திருந்தார். அந்த சமயத்தில் இயக்குனர் காந்தி கிருஷ்ணா ‘செல்லமே’ படத்தின் கதையை தயாராக வைத்திருந்ததால் அந்த படத்தின் நாயகனாக நடிக்க அனுமதிக்குமாறு விஷாலின் தந்தையிடம் கேட்டார்.

யார் இந்த ‘ஜெயிலர்’ விநாயகன்? இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா? ரஜினி சொன்ன அந்த பிரபலம் யார் தெரியுமா?

chellame 1

விஷால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூற ‘நான் விஷால் இடம் பேசுகிறேன்’ என்று ஜி.கே.ரெட்டி கூறினார். அதன் பிறகு உருவானதுதான் ‘செல்லமே’ திரைப்படம்.

வருமான வரித்துறை அதிகாரியான விஷால் ஒரு தொழில் அதிபரின் வீட்டில் சோதனை செய்ய போகும்போது அந்த வீட்டில் இருக்கும் ரீமாசென்னை தற்செயலாக சந்திப்பார். அவர் மீது காதல் ஏற்பட இருவரும் பழகுவார்கள். ஏற்கனவே ரீமாசென்னை ஒருதலையாக காதலிக்கும் பரத்துக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு கட்டத்தில் விஷால் ரீமாசென் திருமணம் நடந்துவிட பரத் அதிர்ச்சி அடைவார்.

இந்த நிலையில் தான் விஷால் – ரீமாசென் கோவா சென்று இருக்கும்போது ரீமாசென்னை பரத் கடத்தி தன்னுடைய சென்னை இல்லத்திற்கு கொண்டு வந்து விடுவார். ரீமாசென் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார். இந்த நிலையில் விஷால் எப்படி ரீமாசென்னை மீட்டார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

chellame 2

ரீமாசென்னை பரத் கடத்தி தன்னுடைய வீட்டில் வைத்திருந்தாலும் ரீமாசென் சம்மதம் இல்லாமல் அவரை தொட மாட்டேன் என்ற வகையில் அவருடைய கேரக்டர் அமைந்திருக்கும். அதனால்தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு விஷால் சிறப்பாக நடித்திருந்தார். அவரது கேரக்டர் சூப்பராக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

‘செல்லமே’ படத்திற்கு முன்பு வரை ரீமாசென் கிளாமர் நாயகியாக தான் நடித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, ‘மின்னலே’ படத்தில் அறிமுகமாகி, விஜய்யின் ‘பகவதி’, விக்ரமின் ‘தூள்’ ஆகிய படங்களில் கிளாமர் நாயகியாக நடித்த நிலையில், தனக்கு நன்றாக நடிக்கவும் வரும் என்பதை உறுதி செய்த படம்தான் ‘செல்லமே’. பரத் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டரை அவர் ஒப்புக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம் என்றும் கூறப்பட்டது.

இந்த படம் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்துக்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுதின. ரூ.3.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட இரு மடங்கு வசூல் செய்தது. தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.

இந்த படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியானது. அங்கும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். சுஜாதா திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான ஐந்து பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது.

chellame

மொத்தத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்குனராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த விஷாலை ஒரு நடிகராக மாற்றி இன்று புரட்சித்தளபதியாக தமிழ் சினிமா உட்கார வைத்துள்ளது.

இருப்பினும் விஷால் மனதில் இன்னும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது.

பாரதிராஜா படத்தை மிஸ் செய்தவர்.. சுப்பிரமணியபுரம் படத்தையும் மிஸ் செய்தவர்.. யார் இந்த சிவச்சந்திரன்..!

அதுமட்டுமின்றி விஜய்யிடம் கதை சொல்லி இருப்பதாகவும் விரைவில் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக அவர் கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருந்தாலும் விஷாலுக்கு ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இன்னும் மனதில் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...