விருச்சிகம் ஆனி மாத ராசி பலன் 2023!

விருச்சிக ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் 8 ஆம் இடத்தில் சூர்யன்- புதன் இணைந்து இட அமர்வு செய்துள்ளனர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை செல்வாக்குமிக்கவராகத் திகழ்வீர்கள். மேலும் இருக்கும் வேலையினை விட்டு புது வேலை தேடுவோர் சிறிது யோசித்து முடிவுகளை எடுக்கவும்.

அரசு வேலைக்காகக் காத்து இருப்போருக்கு நிச்சயம் நல்ல செய்தி தேடி வரும். தொழில்ரீதியாக அபிவிருத்தி செய்ய நினைப்போர் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யாமல் சிறிய அளவில் செய்தல் நல்லது.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே சிறு சிறு மனக் கசப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை கூடுதல் கவனம் தேவை; இல்லையேல் மருத்துவச் செலவு ஏற்படும்.

வீடு, மனை வாங்கும் விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்; மேலும் அட்வான்ஸ் தொகை கொடுத்து உறுதி செய்யவும் செய்வீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும்.

சுக்கிரனும் செவ்வாயும் கேதுவின் நட்சத்திரத்தில் சேர்ந்து அமர்வு செய்துள்ளனர். எடுக்கும் முயற்சிகள் தடங்கல்கள், போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews