பிரகாஷ் ராஜுக்கு இப்படியொரு அந்தஸ்து கொடுத்த கேப்டன்… என்ன மனுஷன்யா விஜயகாந்த்…

விஜயகாந்த் தமிழ் சினிமாவின் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த நடிகர். இவர் நடிகரை தாண்டி சிறந்த மனிதரும் கூட. எந்தவொரு விஷயமானாலும் அதனை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவரை நேசிக்காதவர்கள் என எவருமே இருக்க முடியாது.

ஒரு காலத்தில் தனது மிரட்ட வைக்கும் நடிப்பினால் முன்னணி கதாநாயகனாக இருந்தார் விஜயகாந்த். இவரின் படங்கள் அனைத்திலும் சமுஅதாயத்திற்கு தேவையான நல்ல நல்ல கருத்துகள் இருக்கும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் எண்ணத்தில் இவர் அரசியலிலும் வலம் வந்தார். ஆனால் நல்ல மனிதர்களுக்கு சோதனை வரும் என சொல்வார்கள்.

விஜயகாந்த் இல்லனா என் வாழ்க்கையே இல்லை!.. ஓபன் டாக் கொடுத்த சரத்குமார்!..

அதைபோல இவருக்கு தனது உடலின் மூலம் சோதனை வந்தது. உடல்நல குறைவினால் எழுந்து நிற்க கூட முடியாத நிலைமையில் விஜயகாந்த் தற்போது உள்ளார். இவர் இனிக்கும் இளமை திறைப்படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். பின் அகல்விளக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.

இவர் மேலும் நல்ல நாள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை மிகவும் மதிக்கக்கூடியவர். இதற்கு இவர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவமே எடுத்துக்காட்டு.

விஜயகாந்த் உடன் நதியா நடித்த ஒரே படம்.. பாலிவுட் இசையமைப்பாளர்.. வெளிநாட்டு படப்பிடிப்பு என பிரமாண்டம்..!

கேப்டன் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சொக்கதங்கம். இப்படத்தினை இயக்குனர் கே.பாக்கியராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் செளந்தர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் முதலில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என குழப்பம் இருந்துள்ளது. அக்கதாபாத்திரத்தில் நடிக்க லிங்குசாமி, கரண் போன்ற நட்சத்திரங்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

அப்போது பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் செம்புலி ஜெகன். இவர் இக்கதாபாத்திரத்திற்கு பிரகாஷ் ராஜை நடிக்க வைக்கலாம் என கூறியுள்ளார். பாக்கியராஜும் சம்மதித்து நடிக்க வைத்துள்ளார். படம் நடித்து முடித்ததும் விஜய்காந்திடம் பிரகாஷ் ராஜுடன் நடித்த அனுபவத்தை பற்றி பாக்கியராஜ் கேட்டாராம். அதற்கு கேப்டனும் அமிதாம்பச்சானுடன் நடித்ததுபோல் இருந்தது என கூறினாராம். என்னதான் தன்னுடன் மற்றொரு முன்னணி நடிகர் நடித்தாலும் அவருக்கான அங்கீகாரத்தை கொடுப்பவர் கேப்டன் விஜயகாந்த்.

விஜயகாந்த் படத்தின் ரீமேக்கில் நடித்த ரஜினிகாந்த்.. இரண்டு படங்களின் ரிசல்ட் என்ன தெரியுமா?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews