விஜயகாந்த் உடன் நதியா நடித்த ஒரே படம்.. பாலிவுட் இசையமைப்பாளர்.. வெளிநாட்டு படப்பிடிப்பு என பிரமாண்டம்..!

நடிகை நதியா, ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிலையில் விஜயகாந்த் உடன் அவர் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் ஜோடியாக நடித்திருந்தார் என்றால் அந்த படம் தான் கடந்த 1987-ம் ஆண்டு வெளியான பூமழை பொழியுது என்ற படம்.

வி.அழகப்பன் இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்காக பாலிவுட்டில் பிரபலமாக இருந்த ஆர்.டி.பர்மன் என்ற இசையமைப்பாளரை இயக்குனர் இறக்குமதி செய்திருந்தார். இதனால் இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

விஜயகாந்த்தின் 2வது படம்.. ஷோபாவுடன் நடித்த ஒரே படம்.. இளையராஜாவால் ஜொலித்த அகல் விளக்கு..!

இந்த படத்தின் கதை என்னவென்றால் சிங்கப்பூரிலிருந்து ராஜீவ், தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அப்போது அவருடைய அத்தை தனது மகன் விஜயகாந்த்துக்கு ராஜீவ் தங்கை நதியாவை திருமணம் செய்து வைக்க கேட்கிறார். ஆனால் ராஜீவ் மறுப்பதோடு அவரை அவமதித்து அனுப்பி விடுவார்.

அம்மாவை அவமதித்த ராஜீவை பழிவாங்குவதற்காக நதியாவை திருமணம் செய்து கொள்வதாக சபதம் செய்யும் விஜயகாந்த், நதியா இருக்கும் சிங்கப்பூருக்கு செல்கிறார். அங்கு பல்வேறு சாகசங்கள் செய்து நதியா மனதை கவர்கிறார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் நதியா அவரை காதலிக்க சம்மதிக்கும் நிலையில் திடீரென இருவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

அந்த பிரச்சினையை காரணமாக வைத்து ஒரு சதி செய்து விஜயகாந்த் – நதியாவை பிரிக்க முயற்சிக்கிறார் ராஜீவ். அதற்கு சுரேஷ் உடந்தையாக இருக்கிறார். இதனை அடுத்து விஜயகாந்த், நதியா காதல் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.

எஸ்ஏ சந்திரசேகர் படத்தில் நடிக்க மறுத்த பிரபு-கார்த்திக்.. கைகொடுத்த விஜயகாந்த்.. சூப்பர்ஹிட்டாகிய சாட்சி..!!

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்தது என்பதால் கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கதையில் தேவையான வலு இல்லாததால் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. விஜயகாந்த் உடன் நதியா நடித்த ஒரே திரைப்படம் என்ற பெருமையை மட்டும் இந்த படம் பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் விஜயகாந்த் உடன் அடிக்க நதியாவுக்கு வாய்ப்பு கிடைத்த போதும் கால்ஷீட் இல்லாததால் இணைந்து நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ‘பூமழை பொழியுது’ படத்தில் விஜயகாந்த் உடன் இணைத்து நடித்த அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நதியா குறிப்பிட்டு இருந்தார். மேலும் அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆனது.

வாங்கிய கடனுக்காக இசையமைத்த டி.ராஜேந்தர்.. சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜயகாந்த்.. ‘கூலிக்காரன்’ படத்தின் சுவாரஸ்யம்..!

மொத்தத்தில் நதியாவின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக தான் பூமழை பொழியுது என்ற படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...