விஜயை வச்சு ஸ்ரீகாந்த் கெரியரை காலிபண்ண தயாரிப்பு நிறுவனம்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

மனசெல்லாம் படத்தின் இயக்குனர் சந்தோஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஸ்ரீகாந்துக்காக தான் எழுதிய கதையை விஜய்க்கு கொடுக்குமாறு கவிதாலயா நிறுவனம் வற்புறுத்த கடைசியில் அந்த கதையில் விஜயும் நடிக்க வில்லை என்பது பற்றி அந்த பேட்டியில் கூறி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சந்தோஷ். இவர் மனசெல்லாம் படத்திற்கு பிறகு கவிதாலயா நிறுவனத்துடன் ஒரு படம் எடுக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சந்தோஷிடம் ஒரு டபுள் ஆக்சன் கலந்த திரைப்படத்தின் கதை இருக்க அதை அறிந்து கொண்ட கவிதாலயா நிறுவனம் இந்த கதை விஜய்க்கு மிக பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள் . ஆனால் சந்தோஷ் இது ஸ்ரீகாந்துக்காக நான் எழுதிய கதை என்று சொல்ல அதற்கு கவிதாலயா நிறுவனம் ஸ்ரீகாந்த் இப்போது வளரும் நடிகராக இருக்கிறார். அவருக்கு டபுள் ஆக்சன் கதை என்பது அவர் மீது திணிக்கும் அளவுக்கு இருக்கும்.

அதனால் விஜய் வைத்து இந்த கதையை எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் மேலும் கதையை டெவலப் செய்ய சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். இவரும் கதையை டெவலப் செய்து கிட்டத்தட்ட இரண்டு வருடமாக கவிதாலயா நிறுவனத்துடன் இணைப்பிலேயே இருந்திருக்கிறார். அதுவரை வேறு எந்த படத்திற்கும் இவர் ஒப்பந்தமாகவில்லையாம். அதற்குள் விஜயும் ஒரு பிசியான நடிகராக மாற விஜயின் டிராக் அப்படியே மாறிவிட்டது.

அதன் பிறகு இதே கதையை சிம்புவை வைத்து எடுக்கலாம் என சந்தோஷ் நினைத்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கௌதம் மேனன் சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிம்புவை கமிட் செய்திருக்கிறார். இப்படி சந்தோஷ் வைத்திருந்த அந்த டபுள் ஆக்சன் கதை கடைசியில் யாருக்கும் பயன்படாமலேயே போய்விட்டதாம். கவிதாலயா நிறுவனம் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சந்தோஷ் மீண்டும் இந்த கதையை ஸ்ரீகாந்தை வைத்தாலாவது எடுத்திருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...