நான் வெஜிட்டேரியன்.. எனக்காக அஜித் செஞ்ச ஸ்பெஷல் டிஸ்! யார் அந்த நடிகை தெரியுமா

தமிழ் சினிமாவில் அஜித் ஒரு உச்சம் தொட்ட நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிகர் என்பதையும் தாண்டி அஜித்திடம் ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா திறமைகளும் இருக்கின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும். சினிமாவையும் தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் இவைகளில் அதிக ஆர்வம் உடையவராக அஜித் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரைஃபிள் சுடுதல், ட்ரோன் பயிற்சியாளர் என தனக்கென ஒரு பன்முக திறமைசாலியாக அஜித் திகழ்ந்து வருகிறார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி அஜித் ஒரு மிகச் சிறந்த சமையல் வெறியர் என அனைவருக்கும் தெரிந்திருக்கும். எந்த ஒரு படத்தின் படப்பிடிப்புனாலும் அதில் அஜித் கண்டிப்பாக படத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் தன் கையாலயே பிரியாணி சமைத்து பரிமாறுவது வழக்கம். அதை இன்று வரை தொடர்ந்து கொண்டே வருகிறார் அஜித்.

இந்த நிலையில் தனக்காக ஸ்பெஷலா அஜித் வெஜ் பிரியாணி செய்து கொடுத்தார் என நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அவர் அஜித் நடித்த விசுவாசம் படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார். அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் பிரியாணி செய்து கொடுத்தாராம்.

அதுவும் சாக்ஷி அகர்வால் வெஜிடேரியன் என்பதால் அவருக்கு என தனியாக வெஜ் பிரியாணி செய்து கொடுத்தாராம். மேலும் சாக்‌ஷி ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான டிஷ் தாள்பாட்டி என்ற ஒரு உணவு வகையாம். அதற்கான ரெசிபி என்ன என்பதை அவரின் அம்மாவிடம் கேட்கச் சொன்னாராம் அஜித்.

சாக்‌ஷியும் தன் அம்மாவிடம் அதற்கான ரெசிபியை கேட்டு அஜித்திடம் சொல்ல உடனே அஜித் அதை படப்பிடிப்பில் செய்து கொடுத்தாராம். அதை முதலில் சாக்‌ஷியை டேஸ்ட் செய்ய சொல்லி அதன் பிறகு மற்ற டெக்னீசியன்களுக்கு அந்த டிஸை பரிமாறினாராம் அஜித்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...