அரண்மனை 4 படம் எப்படி இருக்கு… மக்களின் கருத்து இதோ!

அரண்மனை திரைப்படத் தொடர் சுந்தர். சி இயக்கிய நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாகும். அரண்மனை-1 2014 ஆண்டு தினேஷ் கார்த்திக் தயாரிப்பில் வெளியானது. இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றத்தைத் தொடர்ந்து 2,3, தற்போது 4 ஆம் பாகங்களை சுந்தர்.சி இயக்கி அவரது மனைவியான குஷ்பூ தயாரிப்பில் வெளியிட்டனர்.

அரண்மனை-2 2016 ஆம் ஆண்டிலும், அரண்மனை- 3 2021 ஆம் ஆண்டிலும், அரண்மனை-4 இன்று மே 3 ஆம் தேதி வெளியானது. அரண்மனை இரண்டாம் பாகம் ஓரளவு நல்ல விமர்சங்களைப் பெற்றாலும் அரண்மனை மூன்றாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக பேசப்படவில்லை.

இன்று அரண்மனை நான்காம் பாகம் ,மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் சுந்தர். சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தை பார்த்தபின்பு மக்கள் கூறிய கருத்துக்களை இனிக் காண்போம். அவர்கள் கூறியது என்னவென்றால், படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது. கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகள் அபாரமாக உள்ளன. படத்தின் இறுதியில் வரும் பாட்டில் சிம்ரன் நடனம் ஆடியுள்ளது யாரும் எதிர்பாராத ஒன்று, ரசிக்கும் படியாக இருந்தது. யோகிபாபு, கோவை சரளா காமெடி சிரிக்க வைத்தது.

சண்டைக் காட்சிகள் ஓவராக இல்லாமல் எதார்த்தமாக இருந்தது. தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் நடிப்பு அருமை. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் தமன்னா பட்டையை கிளப்பி இருக்கிறார். ஹிப் ஹாப் தமிழாவின் இசை சூப்பர். மொத்தத்தில் குடும்பத்துடன் குழந்தைகளும் என்ஜாய் பண்ணி பார்க்கும் விதமாக அரண்மனை 4 திரைப்படம் இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...