விக்னேஷ் சிவன்- பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். முதல் படத்தில் கிடைத்த நல்ல விமர்சனங்களை தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனிற்கும் நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது. திரை உலகில் காதல் பறவைகளாக வலம் வந்த நயன்தாரா விக்கி ஜோடி கடந்த ஆண்டு பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன் பின் சில காரணங்களினால் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

2019 ஆம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தில் இயக்குனர் ஆகவும் ஹீரோவாகவும் நடித்து கலக்கியிருப்பார். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

காதல் மற்றும் டெக்னாலஜியை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தை முதலில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. அதன் பின்பு சில மாற்றங்கள் ஏற்பட்டு இந்த படத்தை லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடியாக முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அதில் 10 கோடி குறைக்கப்பட்டு 60 கோடியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களைப் போன்று பிரதீப் ரங்கநாதன் வைத்து உருவாகும் திரைப்படமும் காமெடி கலந்த ஜானரில் உருவாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதை எடுத்து நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஒரு கேமியோவாக நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews