தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169 திரைப்படம் ஆன ஜெயிலர் திரைப்படத்தின் மெகா ஹிட் தொடர்ந்து தனது 170வது திரைப்படத்தில் தலைவர் ரஜினி பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிகளை சுற்றி நடத்த உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாத இறுதியில் முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து தனது 171 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. லலித் குமார் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கமல், விஜய் தொடர்ந்து ரஜினியை இயக்க இருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது இந்த படத்தின் கதை உருவாக்கத்தில் இயக்குனர் லோகேஷ் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் சிவகார்த்திகேயன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த நடிகர் வசந்த் ரவி போல தலைவர் 171 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் அமைய இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் மற்றொரு வில்லன் அப்டேட் தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் காக்க காக்க படத்தில் கொடூர வில்லனாக நடித்த நடிகர் ஜீவன் இந்த படத்தில் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

டாப் ஸ்டார் பிரசாந்த் தவற விட்டு தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

காக்க காக்க திரைப்படத்தில் மூலம் மிகவும் பிரபலம் அடைந்த ஜீவன் அதைத் தொடர்ந்து திருட்டுப் பயலே நான் அவன் அல்ல போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். அதன் பின் சில காரணங்களினால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் திரையில் அடி எடுத்து வைக்கும் நடிகர் ஜீவன் ரஜினி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்து பிரபல முன்னணி ஹீரோக்கள் இணைந்து உருவாகும் தலைவர் 171 திரைப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளது தற்பொழுது உறுதியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.