விஜய் படத்தில் நாயகியாக அறிமுகம்.. 28 வருடங்களில் வெறும் 10 படங்கள்.. வனிதா வாழ்க்கையில் வந்த சோதனை..

தங்களின் குடும்பம் மிகப்பெரிய சினிமா பின்புலத்துடனும் இருந்த போதிலும் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியாதவர்கள் பலர் உள்ளனர். சூர்யா, கார்த்தி, விஜய், ஜெயம் ரவி, விஷால் என சினிமா குடும்பத்தில் இருந்தவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு சிலரின் பயணம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நடிகை வனிதாவை சொல்லலாம்.

பிக் பாஸ், சமூக வலைத்தளம் உள்ளிட்டவற்றில் வனிதா தற்போது அதிகம் பிரபலமாக இருந்தாலும் திரையில் நடிகையாக அவர் அந்த அளவுக்கு ஜெயிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மிகப்பெரிய சினிமா பின்புலம், விஜய் படத்தில் நாயகியாக அறிமுகம் என ஓப்பனிங் அருமையாக இருந்தாலும் அதன் பிறகு வனிதா கடந்த 28 வருடங்களில் வெறும் பத்து படங்கள் மட்டுமே நடித்துள்ளதற்கு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த ஏகப்பட்ட சோதனைகள் தான்

விஜயகுமார் – மஞ்சுளா தம்பதி மகள் வனிதா விஜயகுமார் கடந்த 1995ஆம் ஆண்டு விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து அவருக்கு அடுத்த வருடமே ராஜ்கிரண் நடித்த ’மாணிக்கம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஹிட்லர் பிரதர்ஸ்’ என்ற படத்தில் நடித்தார்,.

அதன் பிறகு இரண்டு வருடங்கள் தாமதம் ஆனாலும் ’தேவி’ என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் அவருக்கு பல சோதனைகள் தனிப்பட்ட வாழ்வில் வந்தது. 2000 ஆண்டு அவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்த நிலையில் அவரது குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் தனது கணவரை விவாகரத்து செய்தார்.

vanitha

விவாகரத்துக்கு பின்னரும் குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்பது குறித்த பிரச்சினைகளை அவர் தொடர்ந்து சந்தித்தார். இதனை அடுத்து அவர் இரண்டாவது ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்தது. ஆனால் இந்த திருமணமும் அவருக்கு வெற்றிகரமாக அமையவில்லை. கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை, போலீஸ் மற்றும் நீதிமன்றம் என அவர் தனிப்பட்ட முறையில் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதனால் அவரால் சினிமா பக்கம் கவனம் செலுத்தவே முடியவில்லை.

2010 ஆம் ஆண்டு இரண்டாவது கணவரை விவாகரத்து செய்த பின்னர் அவர் நடன இயக்குனர் ராபர்ட் என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில படங்களில் பணிபுரிந்த நிலையில் ’எம்ஜிஆர் சிவாஜி கமல் ரஜினி’ என்ற படத்தை தயாரித்து நடித்தார். ஆனால் ராபர்ட் உடனான திருமணமும் வனிதாவுக்கு தோல்வியில் தான் முடிந்தது.

அதன் பிறகு அவர் புத்த மதத்திற்கு மாறி தனது குழந்தைகள் தான் வாழ்க்கை என்று முடிவு செய்து தனது வாழ்க்கையை நிம்மதியாக ஓட்டிக் கொண்டிருந்தார். இதன் பின்னர் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட அவரது சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும் கூறப்பட்டது.

vanitha 2

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓரளவுக்கு தனது குடும்பத்தை நிலைநிறுத்தி கொண்ட நிலையில் தான் திடீரென பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஏற்கனவே பீட்டர் பால் திருமணமாகி விவாகரத்து செய்யாமல் இருந்தார் என்பதும் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணமும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அவரையும் பிரிந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தகன் உள்பட மூன்று படங்களில் அவர் நடித்து வருகிறார். நடிகை வனிதா விஜயகுமார் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சந்திரலேகா, திருமதி ஹிட்லர், புதுப்புது அர்த்தங்கள், மாரி, கார்த்திகை தீபம் ஆகிய தொடர்களில் அவர் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வனிதா நடித்திருந்த அநீதி என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது.

இனிவரும் நாட்களில் அவர் அதிக படங்களில் நடித்து முழு கவனத்தையும் திரை உலகம் பக்கம் திருப்புவார் என்றும் தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews