ரவீனா – மணி ஹனிமூன்ல இருக்காங்க.. இதற்கு சம்பளமும் உண்டு.. வனிதா விமர்சனம்..!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது பிக் பாஸ். 6 சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் வித்தியாசமாகவே போய்க் கொண்டிருக்கிறது.

இந்த சீசனால் கமல்ஹாசன் அவர்களுக்கும் சமூக வலைதளத்தில் சில அவ பெயர்கள் கிடைத்தது. கடந்த வாரம் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எவிட் ஆகி வெளியே சென்றனர். அதன்படி வாரத்தின் நடுவே அனன்யாவும் வார இறுதியில் கூல் சுரேஷ் அவர்களும் வீட்டை விட்டு வெளியேறினர்.

தமிழை விட தெலுங்கு பிக் பாஸ் சூப்பர்.. ஜோவிகாவை அங்க அனுப்பி இருக்கணும்.. வனிதா கருத்து..!!

தற்போது பத்து போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர. இதில் இருவரான ரவீனா – மணி தனியாக விளையாடுவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சாதகமாக விளையாடுவதாகவும் ஒருவர் விளையாட்டை மற்றொருவர் விளையாடுவதாகவும் ஆரம்பம் முதலே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

 

raveena mani 1

ஆனால் அது எதையுமே அவர்கள் இருவரும் பொருட்படுத்தாமல் எப்போதும் அவர்கள் இருவர் மட்டுமே பேசிக் கொள்வது என்று இருப்பார்கள். இந்நிலையில் பிக் பாஸை விமர்சனம் செய்யும் வனிதா சமீபத்திய பேட்டியில் மணி ரவீனா பற்றி பேசியுள்ளார்.

பூர்ணிமா பேசியதெல்லாம் திருவாசகம் அப்படிதானே கமல் சார்!.. பிக் பாஸ் ஹோஸ்ட்டை மாத்த கிளம்பிய எதிர்ப்பு!..

அப்போது பேசிய வனிதா இருக்கும் போட்டியாளர்களில் அதிர்ஷ்டசாலிகள் என்றால் அது ரவீனா – மணி தான் என்று கூறியுள்ளார். இருவரும் சம்பளத்துடன் ஹனிமூன் கொண்டாடுவதாக விமர்சித்துள்ளார்.

அதோடு யாருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும், சம்பளம், ஹனிமூன், பெரிய வீடு, 24 மணி நேரமும் சந்திப்பு, பாப்புலாரிட்டி என எந்த காதலர்களுக்கு திருமணத்திற்கு முன்பு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கேட்டுள்ளார்.

நான் மட்டும் தான் இந்த உலகத்திலேயே ஹானஸ்ட்!.. வனிதா விஜயகுமார் போட்ட பதிலடி போஸ்ட்!..

மேலும் இருவரும் விளையாடவே இல்லை என்றும் எப்போதும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பேசிக் கொள்வதும் இரண்டு வீடுகளில் இருந்தால் இரண்டு வீட்டிற்கும் இடையேயான தகவலை பகிர்ந்து கொள்வதுமாக அவர்கள் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.