அமைதிப்படை சத்யராஜ்- மணிவண்ணன் கூட்டணி போல எங்கள் கூட்டணி இருக்கும்… இமான் அண்ணாச்சி பகிர்வு…

இமான் அண்ணாச்சி நகைச்சுவை நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சி என்றாலே நமக்கு நியாபகம் வருவது இமான் அண்ணாச்சி தான். மக்கள் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பின்னர் அதே பெயரில் சன் டிவியிலும் பல வருடங்கள் ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து சன் டிவியின் ‘குட்டி சுட்டிஸ்’ என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இது தவிர நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பல திரைப்படங்களில் இமான் அண்ணாச்சி நடித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ‘சென்னை காதல்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நீர்ப்பறவை (2012), மரியான் (2013), நையாண்டி (2013), கோலி சோடா (2014), மெட்ராஸ் (2014) மற்றும் கயல் (2014) உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் . ஜில்லா (2014), பூஜை (2014), காக்கி சட்டை (2015) மற்றும் புலி (2015) ஆகிய திரைப்படங்கள் இவர் நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றார். 70 வது நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இமான் அண்ணாச்சி.

இந்நிலையில், தற்போது அமீருடன் இணைந்து ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நேர்காணலில் கலந்துக் கொண்ட இமான் அண்ணாச்சி படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் அமீர் அவர்களும் நானும் ஜோடியாக படம் முழுவதும் பயணிப்போம். அமைதிப்படை சத்யராஜ் – மணிவண்ணன் கூட்டணி போல எங்கள் கூட்டணியும் மக்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று பகிர்ந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...